பதிவுலகில் நான் அடியெடுத்து வைத்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆரம்பத்தில் பதிவெழுதி போஸ்ட் செய்தபின் அதோடு கடமை தீர்ந்தாற்போல் இருந்து விடுவேன். அத்திப் பூத்தாற்போல் பின்னூட்டங்கள் வரும். பிறகு இன்டலி, தமிழ்மணம் என்று எனது தளத்தை இணைத்த பிறகுதான் எனக்கு பதிவுலகம் பற்றி புரிய ஆரம்பித்தது. பல பேரை நான் பின் தொடர, என்னைப் பலர் பின்தொடர எனது நட்புகளும் எல்லைகளும் மெல்ல மெல்ல விரிய ஆரம்பித்திருக்கிறது.
இந்த ஒன்றரை ஆண்டில் நூற்றுக் கணக்கான பதிவுகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில பதிவுகள் என்னை வியக்க வைத்தன. சில சிரிக்க வைத்தன. சில பதிவுகள் நெகிழ வைத்தன. சில பதிவர்களின் எழுத்தாளுமை என்னை அட போட வைத்திருக்கிறது.
பதிவுகளில் சிலர் எழுதும் திரை விமர்சனங்கள் பிரபல பத்திரிகை எழுதும் விமர்சனத்தை விட தரமாகவும், அழுத்தமாகவும் நடுநிலையாகவும் (என்ன கொஞ்சம் நீளம்தான் கூடி விடும்) இருப்பது உண்மை.
2010 இன் இறுதியில் இருக்கிறோம். இந்த வருடம் நான் வாசித்தவற்றில் என்னைக் கவர்ந்த, சிந்திக்க வைத்த சில பதிவுகளை இங்கு பட்டியலிட விரும்புகிறேன்.
ரவி ஆதித்யா
இணையத்தில் நான் முதன் முதலில் எதேச்சையாய் வாசித்த பதிவு, ரவி ஆதித்யாவுடையது. ரிமோட் என்ற அந்தப் பதிவு நகைச்சுவையுடன் வித்யாசமாக எழுதப் பட்டிருந்தது. ரிமோட் என்கிற தம்மாத்தூண்டு பொருள் படுத்தும் பாட்டில் டிவியில் தெரியும் தொடர்பற்ற காட்சிகளையும் வசனங்களையும் நச்சென்று நயம்பட எழுதியிருந்தார். மற்றொரு பதிவில், தான் டைப்ரைட்டிங் கற்ற காலத்து நினைவுகளை மிகுந்த சுவாரசியாமாக சொல்லியிருந்தார். அநேகமாக எழுபதுகளில் இந்த அனுபவம் அன்றைய இளைஞர்கள் எல்லோருக்கும் இருந்திருக்கும். டைப்பிங் ஷார்ட் ஹேண்ட் கற்ற காலத்தின் மலரும் நினைவுகளில் நானும் ஆழ்ந்து போனேன்.
http://raviaditya.blogspot.com/2010/07/pack-my-box-with.html
http://raviaditya.blogspot.com/2010/05/blog-post_5367.htmlஅது ஒரு கனாக் காலம்.
தன இளவயது அனுபவங்களை அந்தக் கால வாசத்தோடும், மெல்லிய நகைச் சுவையுடனும், பசுமையான நினைவுகளுடனும் இதில் பகிர்ந்திருக்கிறார் பதிவர். மாப்பிள்ளைத் தோழனும் திரட்டிப் பாலும் என்ற பதிவைப் படித்துப் பாருங்கள். புரியும்.
வித்தியாசமான வியாதி-பெங்களூரு நினைவுகள் என்ற பதிவில் தனக்கு வந்த நோயைப் பற்றியும் மருத்துவ மனை அனுபவங்களையும் கூட நகைச்சுவையோடு இவர் சொல்லியிருந்த விதமும், பதிவை முடித்திருந்த விதமும் என்னைக் கவர்ந்தது.
ரிஷபன்
பத்திரிகை மூலம் ஏற்கனவே நான் அறிந்தவர்தான் ரிஷபன். சிறுகதைக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணம் இவர் கதைகளில் பளிச்செனத் தெரியும். உணர்வு பூர்வமான இவரது எழுத்து எவரையும் ஆட்கொள்ளும். ஸ்ரீரங்கத்து மண் வாசம் கலந்த எழுத்து வேறு. கேட்கவா வேண்டும். இவரது கண்ணாடி என்ற சிறுகதையும் ரிக்ஷா நண்பர் என்ற கதையும் உன்னதமானது.
http://rishaban57.blogspot.com/2010/07/blog-post_18.html
சோத்துமூட்டை
அர. பார்த்தசாரதியின் பதிவில் ரயிலில் கிடைத்த ஆப்பு என்ற ஒரு சிறுகதை என்னை திகைக்க வைத்தது எனலாம். சிறுகதை இலக்கணத்தோடு, மிக மிக வித்தியாசமான ஒரு தொழிலைக் குறித்து எழுதியிருந்தார். படித்து விட்டு சில நிமிடம் அயர்ந்து அமர்ந்து விட்டேன். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்கிற வரிகள்தான் நினைவுக்கு வந்தது.
கோபி ராமமூர்த்தி.
இவரது ஜடையும் , சொம்பு புராணமும் என்னை மிகவும் கவர்ந்த சுவாரசியமான பதிவுகள். தான் எழுத எடுத்துக் கொள்ளும் பொருளை, அது புத்தக விமர்சனமாகட்டும், விழா நிகழ்வுகளாகட்டும் பயணமாகட்டும் , சொம்பு உருவாக்கமாகட்டும் அதுகுறித்த ஆழ்ந்த தகவல்களுடன் தெளிவான ஞானத்தோடு இவர் எழுதும் விதம அசத்துகிறது. சடையை நான் மிகவும் ரசித்தேன். இறுதியில் அது சிவனாரின் சடையில் ஆன்மீகத்துடன் இணைத்த விதம அற்புதம். இவரது எழுத்தாளுமையும், நுணுக்கமும் கொஞ்சம் சுஜாதா, கொஞ்சம் பாலகுமாரனை. நினைவுபடுத்துகிறது
http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_19.html
ஆர்.வெங்கடசுப்ரமணியன் (தீராத விளையாட்டுப் பிள்ளை)
இவரது சங்கீதப் பதிவுகள் சுவாரசியமானவை. கலகலப்பாக பின்னி எடுக்கிறார். காசு கொடுத்து சங்கீதம் கேட்ட முதல் ஆள் யாரென்று ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறார். தன்னைப் பற்றிய தகவல்களையும் கலகலப்பாக தந்திருக்கிறார். கண்டிப்பாக இவரது காது கர்னாடிக் காதுதான்
http://mannairvs.blogspot.com/2010/12/blog-post_30.html
ஜோதிஜி (தேவியர் இல்லம் திருப்பூர்)
திருப்பூர் சாயப் பட்டறைகளில் சாயக் கழிவுகளின் மூலம் நகரில் ஏற்படும் மாசும் அதுசார்பாக இடப்பட்ட அரசாணைகளும் , அதற்குப் பின் நடந்தவைகளையும் டெக்னிக்கலாக ஏராளமான தகவல்களோடு எழுதியிருக்கிறார். இறையன்புவின் நேர்மை கூடபிரச்சனைக்கு ஒரு காரணம் என்கிறார். சாயப் பட்டறைகள் குறித்து நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது.
http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_27.html
தங்கத்தமிழ்
எனக்கு காளமேகப் புலவரின் சிலேடைப் பாடல்களின் மீது ஒரு ஈர்ப்பு உண்டு, இவரது பதிவு முழுக்க அவரது பாடல்களின் அலசல்கள்தான். தங்கத்தமிழ் என்று சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்
http://thangathamizh.blogspot.com
.
முத்துச் சிதறல்
மனோ சாமிநாதனை எண்பதுகளிலேயே எனக்குப் பழக்கம். இணைய எழுத்தாளராக அவர் அசத்திவருவது சமீபத்தில் தான் தெரியும். இவரது பாலைவன வாழ்க்கை வெகு சுவாரசியம். பெண்களுக்காக இவர் எழுதும் விஷயங்களும் பயனுள்ளவை.
http://muthusidharal.blogspot.com/2010/07/blog-post_10.html
திரை விமர்சனங்கள்
சினிமா விமர்சனங்கள் என்று எடுத்துக் கொண்டால் கேபிள் சங்கர், குடந்தை கீதப்பிரியன், சி.பி செந்தில் குமார், ஜாக்கிசேகர் என்று சொல்லிக் கொண்டு போகலாம். குடந்தை கீதப்ரியனின் தூங்கா நகரம் மதுரை, மதுரையை கண்முன் நிறுத்தியது. சி.பி.செந்தில்குமாரின் ஈரோடு வங்கி காசோலை மோசடி விழிப்புணர்வை ஏற்படுத்திய பதிவு. (தலைப்பை நான் மாற்றி விட்டேன்)
http://adrasaka.blogspot.com/2010/12/blog-post_10.html
கவிதைகள்
என்னைக் கவர்ந்த சில எளிமையான மென்மையான கவிதைகள்.
உணர்ந்தேன். (ராஜியின் கற்றலும் கேட்டாலும்)
உள் காயம் (கே.பி.ஜனா)
இனி ஒரு விதி செய்வோம் (ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி)
http://aaranyanivasrramamurthy.blogspot.com/2010/12/blog-post_22.html
இடமும் வலமும் (உழவன்)
http://tamiluzhavan.blogspot.com/2010/11/blog-post.html
(பனித்துளி சங்கரின் கவிதைகளை படிக்க முயல்கிறேன். அவரது வலைப பக்கம் எனக்கு திறந்து பார்க்கவே முடியவில்லை. ஏன் எனத் தெரியவில்லை)
கொஞ்சம் வெட்டிப் பேச்சு (சித்ரா)
கடைசியாக, இந்த ஆண்டின் மிகச் சிறந்த பதிவாக எனக்குத் தோன்றியது சித்ராவின் “விருந்திலே ஒரு இதயம் முளைக்குதோ” என்ற பதிவுதான். வாழ்வின் மிகப்பெரிய உண்மையை ஒரு விருந்தின் மூலம் அனுபவபூர்வமாய் விருந்துண்டவர்களுக்கு உணர்த்தி, வாவ்! அற்புதம். அதை சித்ரா சற்றே நகைச்சுவையோடு எழுதி இருந்த விதமும் முடித்திருந்த விதமும் நெஞ்சை நெகிழ்த்தியது. இவரது பதிவுகள் படிக்கும்போது ஒருவித உற்சாகம் தொற்றிக்கொள்கிறது
http://konjamvettipechu.blogspot.com/2010/12/blog-post_19.htm
.
நான் படித்தவற்றில் என்னை பாதித்தவைகளைத்தான் இங்கே பகிர்ந்து கொண்டேன். நான் படிக்க வேண்டியது இன்னும் கடலளவு இருக்கிறது.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
29 comments:
மென்பொருள் தான் என்னோட உலகம். எழுத்துலகம் கற்பனை நிறைந்த கருப்பொருள் உலகம். இருந்தாலும் ஏதோ எழுதிப் பழகுகிறேன். உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. ;-)
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். ;-)
தொடர்ந்து பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
கவர்ந்த பதிவுகளின் இணைப்பு கொடுத்திருந்தால், உபயோகமாயிருந்திருக்கும்!
பகிர்வுக்கு நன்றிங்க...
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பரவாயில்லை எல்லாப் பதிவுகளையும் நினைவில் வைத்து அருமையாக புகழ்ந்திருக்கிறீர்கள்...
// கவர்ந்த பதிவுகளின் இணைப்பு கொடுத்திருந்தால், உபயோகமாயிருந்திருக்கும்! //
REPEAT...
நினைத்துப்பார்த்தல் சுகம். தொடர்ந்து பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//2011 இன் இறுதியில் இருக்கிறோம்//
ஆண்டின் இறுதியில் ஒரு ஹிட் போஸ்ட்
என்னைக்குறிப்பிட்டதற்கு தனி நன்றி
காசோலை மோசடி என்பதே சரியான தலைப்பு. சும்மா கிளாமருக்காக அப்ப்டி வைத்தேன்
ஆரம்பத்தில் நான் நறுக் சுருக் எனவே சினிமா விமர்சனம் எழுதினேன்.அமரர் சாவியின் அறிவுரைப்படி...ஆனால் பதிவுலகில் நீண்ட விமர்சனத்துக்கே வரவேற்பு இருந்ததால் என் ஸ்டைலை மாற்றிக்கொண்டேன்.1998 சாவி இதழில் எனது விமர்சனங்கள் ஒரே பக்கம்தான் வரும்
நீங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தெரிந்த சில தளங்கள்..தெரியாதவை சில..ரவி ஆதித்யா பக்கத்தை விட்டு இன்னும் நான் வெளியே வரவில்லை!
உங்களைப் போன்றவர்களின் ஆசிர்வாதம் இந்த ஆண்டில் நான் பெற்ற சிறப்பான வாழ்த்துகளில் ஒன்று. மற்றொரு ஆச்சரியம் நம்ம குருஜீ அது ஒரு கனாக்காலம் திரட்டிப் பால் கதையை நினைவு கூர்ந்தமைக்கு சுந்தர் சார்பாக நன்றிங்க.
இனிய வாழ்த்துகள்.
சுருக்கமான அறிமுகங்கள்;
சுவையான பதிவு!
உங்களுக்கு
எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
நகைச்சுவை; இரசித்தவை 13 !
ரொம்பவே புகழ்ந்திருக்கிறீர்கள்!
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி!
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
ஆஹா... இன்னுமா இந்த பதிவுலகம் நம்பளை நம்புது !!!!!!????
எழுதுவது வெகுவாக ... ஏன், சுத்தமாக குறைந்து விட்டது... உங்களை ( யும் ) வாசிப்பதுண்டு ( மன்மதன் அம்பு விமர்சனம் - அண்மையில் ) ... அதன் முன்பு ஒரு மலை ஏற்றம் ... ( யாருடா அது இங்கு புகைப்பது ???!!!
நன்றி ... ஜோதிஜிக்கும் ஒரு நன்றி... பதிவு , புத்தகம் என்று ஒரு கோடு வரைத்து , தெளிவாக பயனிக்கறார் ..
எழுதுவதுற்கு நிறைய ஆதங்கம் உண்டு ... இந்த புது வருஷத்தில் பார்க்கலாம் ..
நன்றியுடன்
சுந்தர்
இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் என் நன்றி.
மிக்க நன்றி!
ஆர்.ஆர்.ஆர்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வித்யா மேடம்.ஊக்கத்திற்கு நன்றி
"2011 இன் இறுதியில் இருக்கிறோம்"
வித்யா மேடம் தவறை திருத்துங்கள்.
தவறைத் திருத்தி விட்டேன். நன்றி
அன்புடன் நன்றி.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
எல்லாப் பதிவுகளையும் நினைவில் வைத்து அருமையாக புகழ்ந்திருக்கிறீர்கள்...
தொடர்ந்து பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
Wishing You a very very happy new year - 2011,madam !
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
பதிவர்களை ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி
அன்புடன் நன்றி.
Post a Comment