Sunday, December 12, 2010

குப்பை இல்லாத பூமி வேண்டும்

இன்று காலை Z தமிழ் தொலைக் காட்சியில் சென்னை மேயரின் குறை தீர்க்கும் கேள்வி பதில் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தொலைபேசின மக்களில் பெரும்பாலானவர்கள் குப்பைகள் அகற்றவில்லை, மழை நீர் தேங்கியிருப்பது போன்ற குறைகளையே கூறினார்கள். நான் சற்றே யோசித்தேன்.

குப்பைகள் எப்படி சேருகிறது? கை கால் முளைத்து தானாகவா வீதியில் நடந்து வந்து விழும்? நான் பார்த்த வகையில் குப்பையை வீசி எறிவதிலிருந்தே மனிதர்களின் சாமர்த்தியத்தை அறிந்து கொள்ளலாம். இவர்கள் ஒருபோதும்

குப்பை வண்டி வரும்போது குப்பையை அதில் போட மாட்டார்கள். வண்டி தனது வீடு தாண்டிச் செல்லும் வரை காத்திருப்பார்கள். அது போனபிறகு வந்து வீதியில் வீசி விட்டுச் செல்வார்கள். அதுவும் தன் வீட்டு வாசலில் போட மாட்டார்கள். மறக்காமல் அடுத்தவர் வீட்டை ஒட்டித்தான் எறிவார்கள்.

ஒருவர் குப்பை பையை எறிந்தால் போதும் மற்றவர்கள், அவரைப் பின்தொடர்வார்கள். பொத்து பொத்தென்று வரிசையாய் விழுந்து அங்கே ஒரு மலையே உருவாகி விடும். தன்வீடு மட்டும் சுத்தமாய் இருந்தால் போதும்.
ஊர் நாசமாய்ப் போனால் என்ன?

நல்லதைக் கற்றுக் கொடுக்க இங்கே யாருமில்லை. கற்றுக்கொள்ளவும் யாருக்கும் விருப்பமுமில்லை. சுத்தம் சோறு போடும் என்று பள்ளியில் படித்ததெல்லாம் சும்மா மதிப்பெண்களுக்காக. ஒரு சில பெரிய மனிதர்கள்
இருக்கிறார்கள். இவர்கள் சிங்கப்பூரில் மட்டும்தான் வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பார்கள். இங்கே காலை வைத்ததும் காறித் துப்புவார்கள்.

எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தைக் குறை சொல்வதும் அவர்கள் உதவியைக் கோருவதுமே நம்மவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. எதெதற்கோ சபதம் எடுக்கிறோம். இனி குப்பையை வீதியில் வீசி எரிவதில்லை என்று எல்லோரும் சேர்ந்து சபதம் எடுத்தால் நன்றாக இருக்கும்.

குப்பை வண்டிகள் குப்பையை சேகரிக்கும் வேலையை மட்டுமே செய்ய வீண்டும். கீழே இருந்து அள்ளிப் போடும் நிலை ஏற்படக் கூடாது. அவர்களும் மனிதர்கள்தானே? வண்டி வரவில்லை எனில் புகார் செய்யலாம். வண்டி வருவதற்கு ஏற்பாடு செய்யலாம். அப்படியும் வரவில்லை எனில் அந்தந்த ஏரியா மாநகராட்சி அலுவலகம் முன்பு சென்று குப்பைகளை வைத்து விட்டு வர வீண்டும். NEEL மெட்டலின் செயல்பாடு மிகவும் அதிருப்தி தரக் கூடியதாத்தான் உள்ளது. அதற்காக நாம் நம் ஒழுக்கத்திலிருந்து விலகி விடக் கூடாது.

ஒரு நல்ல சமுதாயம் என்பது, சுத்தமான உலகம் என்பது ஒவ்வொரு வீட்டில் இருந்தும்தான் ஆரம்பிக்கிறது இந்தியா எனது தேசம் , இந்திய மக்கள் என் சகோதரர்கள் என்கிற உறுதி மொழியில், இனி ஒருநாளும் வீதியில் குப்பை போட மாட்டேன் என்கிற வரிகளையும் சேர்க்கலாம். சட்டத்தினால் மட்டும் மாற்றங்கள் வந்து விடாது. தனிமனித ஒழுக்கம் பேணப் பட்டால்தான் நாடு குப்பையிலிருந்து விடுதலை பெரும்.

ஒரு குட்டிக் கதை உண்டு. மூன்று பேருக்கு அவர்களது தகப்பன் ஆளுக்கு ஒரு அறையும் கொஞ்சம் பணமும் கொடுத்து அந்தப் பணத்தைக் கொண்டு அந்த அறையை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளலாம் என்றாராம்.

முதல் மகன் பணத்தை செலவழிப்பதற்காகவும், அறையை நிரப்பும் எண்ணத்திலும் தனக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கி நிரப்பினானாம்.

இரண்டாவது மகன் குறைந்த விலையில் நிறைய வைக்கோலையும் வரட்டிகளையும் வாங்கி அடுக்கினானாம்.

பத்து நாட்கள் கழித்து தகப்பன் ஒவ்வொரு அறையாகப் பார்க்க வந்தார்.
முதல் இரண்டு அறைகளைப் பார்த்தவர் முகம் சுழித்து மூக்கைப் பொத்திக் கொண்டார்.

மூன்றாவது அறையை கடைசி மகன் திறந்து காட்ட அவர் சற்றே மயங்கி நின்றார். உள்ளே எந்தப் பொருளும் இல்லை. அரை முழுக்க உயர்தர
வாசனையை நிரப்பி வைத்திருந்தான் அந்த மகன்.

நாம் நம் மனசைக் கூட இப்படித்தான் எதை எதையோ அடைத்து வைத்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறோம். உள்ளம் சுத்தமாயிருப்பதும், ஊர் சுத்தமாயிருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது.

26 comments:

NADESAN said...

ஒரு நல்ல சமுதாயம் என்பது, சுத்தமான உலகம் என்பது ஒவ்வொரு வீட்டில் இருந்தும்தான் ஆரம்பிக்கிறது இந்தியா எனது தேசம் , இந்திய மக்கள் என் சகோதரர்கள் என்கிற உறுதி மொழியில், இனி ஒருநாளும் வீதியில் குப்பை போட மாட்டேன் என்கிற வரிகளையும் சேர்க்கலாம்.----

சரிதான் சகோதரி முதலில் அவரவர் விழிப்பாக இருக்க வேண்டும் நான் குப்பையை தெருவில் வீசினால் எங்கள் தெரு தானே முதலில் அசிங்கமாக இருக்கும் என்கிற அறிவு முதலில் வளர வேண்டும் நல்ல கருத்தான பதிவு

அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

பனித்துளி சங்கர் said...

சிந்திக்கத் தூண்டும் சிறந்தப் பதிவு .

'பரிவை' சே.குமார் said...

சிந்திக்கத் தூண்டும் பதிவு.

snkm said...

நல்ல பதிவு. நன்றி

Rekha raghavan said...

அருமையா சொல்லியிருக்கீங்க.

raji said...

சமுதாயத்திற்கு மிகவும் தேவையான பதிவு

Kanchana Radhakrishnan said...

நல்ல பதிவு.

மனோ சாமிநாதன் said...

அருமையான‌ விழிப்புண‌ர்வு மிக்க‌ ப‌திவு!

R. Gopi said...

யார் மேடம் இதையெல்லாம் காதில் வாங்குறாங்க:(

R. Gopi said...

உலகம் ரொம்ப சின்னது.

என்னுடைய பன்னிரண்டாம் வகுப்புத் தோழியை ஏழு ஆண்டுகள் கழித்துப் போன ஞாயிறன்று சந்தித்தேன். அவர் உங்கள் விசிறியாம். கண்மணி போன்ற சஞ்சிகைகளில் உங்கள் கதைகளைப் படித்திருக்கிறாரம். அவர் பெயரும் உங்கள் பெயர்தான்!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நடேசன், பனித்துளி சங்கர் , ராஜி, காஞ்சனா, குமார், ரேகா ராகவன், snkn, மனோ அனைவருக்கும் மிக்க நன்றி. கோபி உலகம் சின்னதுதான். உங்கள் தோழியிடம் சொல்லுங்கள் நான் இப்போது தங்களின் விசிறி என்று.

சுபத்ரா said...

வித்யா :)))))

நான் தங்களோட நாவல்களைத் தேடிப் படிக்கின்றவள் :)) கண்மணியில் :))

நான் எதிர்பார்க்கவேயில்லை. மனோ அம்மாவின் ப்ளாகிலிருந்து லின்க் கிடைத்து வந்தேன் :))

I am ur Fan :)) Happy to see u here :))

சுபத்ரா said...

பதிவை இன்னும் படிக்கவில்லை. சாரி.. படித்துவிட்டு வருகிறேன் :)

சுபத்ரா said...

//நாம் நம் மனசைக் கூட இப்படித்தான் எதை எதையோ அடைத்து வைத்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறோம். உள்ளம் சுத்தமாயிருப்பதும், ஊர் சுத்தமாயிருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது//

நிச்சயமாக. இதை நாம் சிறிது உணர்ந்து பார்க்க வேண்டும்!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Thank you Subathra. glad to see you here. keep in touch

Chitra said...

நாம் நம் மனசைக் கூட இப்படித்தான் எதை எதையோ அடைத்து வைத்து மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறோம். உள்ளம் சுத்தமாயிருப்பதும், ஊர் சுத்தமாயிருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது.


......சரியா சொல்லி இருக்கீங்க... உண்மைதான்...... சுத்தமாக (மனதையும் ஊரையும்) வைத்து இருப்போம் என்று நினைக்க ஆரம்பித்தாலே, மாறுதல் வரும்.

Chitra said...

சாரிங்க..... பொதுவாக சனி ஞாயிறு பதிவுகள் பக்கம் வருவது மிகவும் குறைவு. அதனால் தான், இந்த நல்ல பதிவை மிஸ் பண்ணி விட்டேன்.

Chitra said...

என் பதிவுக்கு உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். You made my day! ரொம்ப நன்றிங்க....
அப்பாவுடன் நான் அடிக்கும் அரட்டையின் தொடர்ச்சியாகத்தான் வெட்டி பேச்சு ப்லாக் ஆரம்பித்தேன். அவர் என்றும், எங்கள் நினைவில்....... :-)

ஸாதிகா said...

வாவ்..90களில் உங்கள் கதைகளை அநேக பத்திரிகைகளில் ரசித்து இருக்கின்றேன்,நீங்களும் வலைப்பூவில் எழுத தொடங்கி விட்டீர்களா?மிக்க சந்தோஷம்.தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.கணினி மூலம் உங்கள் படைப்புகளைக்காண வெகு ஆவலுடன் இருக்கின்றோம்.அப்படியே என் வலைப்பூ பக்கம் வந்து பாருங்கள்.
http://shadiqah.blogspot.com/

மோனிஷா said...

ஒவ்வொருவரும் தன் வீட்டையும் தன் முற்றத்தையும் சுத்தமாக வைத்தாலே நாடு சுத்தமாகிவிடும்.நல்ல பதிப்பு.

Vijiskitchencreations said...

மனோ சாமிநாதன் ப்ளாகிலிருந்து லின்க் கிடைத்து வந்தேன்.
நல்ல பதிவு.

My first visit. Very nice.

wwww.vijisvegkitchen.blogspot.com
www.vijiscreations.blogspot.com

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Thank you Sathiqua, monisha, viji

ஹுஸைனம்மா said...

முதல் முறை வருகிறேன் இங்கு. நான் கண்ட முதல் பதிவே என் எண்ணங்களுக்கு ஒத்ததாக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

சிவகுமாரன் said...

மூன்றாமவன் அறையில்
விளக்கை ஏற்றி ஒளியால்
நிரப்பி இருந்தாதாக படித்திருக்கிறேன்
நீங்கள் ஒளியை மணக்க
வைத்துவிட்டீர்கள். நன்றாக இருந்தது

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வித்யா மேடம், உங்கள் வலைப்பூ முகவரி இப்போது தான் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. உங்கள் கதைகள் சில படித்துள்ளேன். இந்த முறை (போன மாதம்)இந்தியா வந்த போதும் சில புத்தகங்கள் வாங்கினேன். இன்னும் வாசிக்க சமயம் அமையவில்லை

உங்கள் எழுத்து எனக்கு பிடிக்கும். மீண்டும் வாசிக்க செய்யும் வர்ணனைகள் கொண்ட எழுத்து. வெறும் முகஸ்துதிக்காக கூறவில்லை

தமிழில் முறையான பட்டம் பெற்றவளில்லை நான். உங்களை போன்ற எழுத்தாளர்களின் எழுத்தை பார்த்த ஆர்வத்தில் நானும் கொஞ்சம் எழுத தொடங்கி உள்ளேன் வலைப்பூவில் (சிறுகதை / தொடர்கதை / கவிதை என). மிக சிலவே பொது ஜன பத்திரிகையில் வந்துள்ளன. இப்போது வெறும் என் ஆர்வத்தின் வடிகாலாய் மட்டும் எழுத ஆரம்பித்துள்ளேன்

உங்கள் வலைப்பூவை கண்ட மகிழ்வில் இந்த மடல். மற்ற பதிவுகளை படித்த பின் மீண்டும் எழுதுகிறேன்...நன்றி

அன்புடன்,
உங்கள் வாசகி (புவனா)

Krishnakumar Sathiyawageeswaran said...

Ungalin intha pathive palarin arivukkathavai thirakkaum enru nambukiren. Many of us in the world are doing many things only out of fear. Even in singapore many people dont put garbage on road due to fear of FINES. it is also called as FINE CITY. It may look difficult but not impossible to achieve. We will get an clean environment soon. For those who act only out of fear, let me tell you - Nature will take its toll on those who don't care about environment. For these kind of reasons only many religions followed certain restrictions. But it was followed without understanding the purpose. As you rightly said Our corporation even arranged for collecting plastics waste for two months continuously sharp 8 am in our area, But public didn't respond. Only few people utilize the facility. It is not right to blame the system without even moving our finger to change the system. Change should start with every individual as you have rightly pointed.