Tuesday, July 20, 2010

கயிலாய கிரிவலம் (இரண்டாம் நாள்)

snow fall on our helpers and yalks
heavy snow fall around our tents
Crossing the frozen river




Climbing down from dolmaalaa



Tibetians namaskaara parikrama



Dwajasthambam of kailash





gowri kund



Towards Dolmala pass

திராபுக் இதுதான் கயிலையின் வடக்கு முகத்தை நாம் பார்க்கும் இடத்தின்பெயர். அந்த இடத்தின் உயரம் பதினாறாயிரம் அடி. குளிர் பின்னி பெடல் எடுக்கிறது. அதிக உயரத்தில் பசி இருக்காது. நாம் தங்குவதற்கு அங்கு விடுதிகள் உண்டு. எங்கள் அறையின் கண்ணாடி ஜன்னல் வழியே கம்பீரமாய்த் தெரிகிறது கயிலையின் வடக்கு முகம் வெகு அருகில். உண்மையில் அது தொலைவில்தான் உள்ளது. மு. மேத்தாவின் கவிதைதான் என் நினைவுக்கு வந்தது. கண்கள் நட்சத்திரங்களை உரசினாலும் கைகள் ஜன்னல் கம்பிகளோடுதான் உறவாடும். அடுத்த நாள் மிக முக்கியமான நாள். உடலளவிலும், உணர்வுபூர்வமாகவும் நாம் மிக உயரத்திற்கு செல்லப் போகும் நாள். டிராபுக்கிலிருந்துநள்ளிரவு இரண்டு மணிக்கே புறப்பட்டு விட வேண்டும் டோல்மாலா பாஸ் இதுதான் அடுத்து நாம் கடக்க வேண்டிய மிக உயரமான கணவாய். இதன் உயரம் பதினெட்டாயிரத்து ஐநூறு அடி. இங்கே ஏறும்போது குதிரைகளுக்கே மூச்சு இறைக்கிறது. சொல்ல மறந்து விட்டேனே. முதல் நாள் முழுவதும் (பதினாறு கிலோமீட்டர் ) நடந்ததால் உடல் அசதி தீரவில்லை. டோல்மாலா ஏறுவதர்க்காவது குதிரை கிடைக்குமா என்று வழிகாட்டியிடம் விசாரித்தோம். எப்படியோ மூன்று குதிரைகள் தேற்றினார். அந்த எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு முழு பணமும் கொடுக்க வேண்டி வந்தது. (எட்டாயிரம் ரூபாய்) என் குதிரை ஏற்றம் முதன் முறையாக அரங்கேறியது. அதுவும் செங்குத்தான மலைப்பாதையில். உள்ளே உதறினாலும் வெளியே ஜான்சி ராணி கணக்கில்தான் உட்கார்ந்திருந்தேன். குதிரை செல்வதற்கு ஏற்ப முன்னும் பின்னும் சாய்ந்து நாம் அட்ஜஸ்ட் ஆக வேண்டும். இதெல்லாம் தானாக வந்து விடும். பாறைகளுக்கிடையில் அது செல்லும்போது முட்டி உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சும்மா ஜாலியாகத்தான் இருந்தது. ஒரு இடத்தில் எனக்கு முன்னே சென்ற குதிரை திடீரென்று என்ன சந்தோஷமோ அல்லது கோபமோ முன்னங்கால்களைத் தூக்கி சிலுப்பிகொண்டதே பார்க்கலாம். அதில் அமர்ந்திருந்த ஒரு இளம் சன்யாசினி கீழே விழுந்து கிடுகிடுவென்று உருண்டோட அடுத்த குதிரை என்னுடையது. எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது. என் குதிரைக்காரி லாவகமாய் என் குதிரையை அழைத்துச் சென்று விட்டாள். அந்த சண் யாசிநியைப் பற்றிய கவலையோடு சென்றேன். ஒரு மணி நேரம் கடந்திருப்போம் பார்த்தால் முன்னால் சென்ற குதிரையில் அந்த சன்யாசினி ஜம்மென்று போய்க்கொண்டிருந்தாரே பார்க்கலாம். கனத்த உடைகளும் குளிர்த்தொப்பியும் அணிந்திருந்ததால் காயமின்றி பிழைத்து விட்டார். திபெத்தியர்களுக்கும் நமக்குமான பாஷை சர்வதேச பாஷைதான். உடல் மொழி மட்டும்தான். அவர்கள் பாஷை நமக்குத்தெரியாது. ஆங்கிலம் அவர்களுக்குத்தேரியாது. என்குதிரைக்காரியிடம் செய்கையில் கேட்டேன், டோல்மாலா எங்கே என்று. கண்ணுக்குத் தெரியாத எதோ ஒரு உச்சியைக்காட்டினார் அடேயப்பா இன்னும் அவ்வளவு உயரத்திர்க்கா ஏற வேண்டும் என பிரம்மிப்ப்பாயிருன்ததுஒருவழியாய் முச்சிரைக்க குதிரை என்னை டோல்மாலா பாசில் இறக்கிவிட்டது. பிறந்த குழந்தை மாதிரி மலங்க மலங்க நின்றேன். சுத்தமாய் எண்ணங்கள் இல்லாததால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அதிக உயரம் காரணமாக மூளைக்கு இரத்தம் குறைவாக செல்வதால்தான் இந்த நிலை. அந்த உயரத்தில் ஆக்சிஜன் வெகு குறைவாகவே இருக்கிறது. மேடிடேஷனில் எண்ணங்களற்ற நிலைக்குச் செல்ல மிகுந்த பிரயத்தனப் பட வேண்டும். அனால் இங்கு அது சுலபமாய் நிகழ்ந்து விடுகிறது. என் நினைவே எனக்கு இல்லை. என் பெண்களின் நினைவு கூட வரவில்லை. டோல்மாலாவில் ஒரு பெரிய பாறை இருக்கிறது. இது தாரா தேவிக்குரியது. திபெத்தியர்களுக்கு இது மிக முக்கியமான இடம். நாம் நடந்து செல்லவே சிரமப்படும் இந்த பரிக்கிரமாவை அவர்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடி சுற்றுகிறார்கள். ஒரு முறை பரிக்கிரமா செய்து முடிக்க இருபத்தி இரண்டு நாட்களாகுமாம். கையில் ஆகாரம் கூடக் கிடையாது. நம்மைப் போன்றவர்கள் ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கிறார்கள். அசுர பக்தி என்பது இதுதானோ? யாராக இருந்தாலும் சரி டோல்மாலாவில் இருந்து நடந்துதான் கீழே இறங்க வேண்டும். கடுமையான பாறைகள். இறங்கும் வழியில் வலது புறமாக அதல பாதாளத்தில் பச்சையாகத் தெரிகிறது கவுரி குண்டம். பார்வதி தேவி நீராடிய இடம் இயற்கையாகவே பச்சையாக இருப்பது அதிசயம். அதை தரிசித்தபடி மெதுவே இறங்கி மீண்டும் மலைத்தொடர்களில் ஏறுவதும் இறங்குவதுமாய் நடை நடை நடை மட்டும்தான். வெகு தூர நடைக்குப்பிறகு ஒரு சமவெளியில் எங்களுக்கு டெண்ட்டுகள் அமைத்தார்கள். உள்ளே போய் படுத்ததுதான் தெரியும். என் தோழி கீதா என்னை ஒரு ஸ்லீப்பிங் பையில் போட்டு ஒரு ஓரமாக உருட்டி விட்டது கூட அரை நினைவுதான். நல்ல அசதி. நல்ல தூக்கம் மறுநாள் எழுந்து டெண்ட்டை விட்டு வெளியே வந்தால் கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வெள்ளை வெளேரென பனிப்பொழிவு. கூடாரத்திற்கு வெளியே படுத்துக் கிடந்த யாககுகள் உதவியாளர்கள் மீதெல்லாம் ஐஸ் படர்ந்திருந்தது. பார்க்க கண் கொள்ளா காட்சி அது. ஆனால் மூன்றாம் நாள் பரிக்கிரமாவைத் தொடர முடியுமா? காத்திருங்கள், வருவேன்

9 comments:

தக்குடு said...

ஒரே மூச்சில் வாசித்தேன் உங்கள் பதிவை! கயிலை யாத்திரைக்கு வாழ்த்துக்கள்! படங்கள் அனைத்தும் அருமை!..:)

geethappriyan said...

அம்மா,
சிறப்பான தொடர்ச்சி,பத்தி பிரித்தும்,ஜஸ்டிஃபை செய்தும் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.தமிலிஷில் இணைத்தால் இன்னும் பலருக்கு செல்லும்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...

ருதிராட்சமரம், சாளக்கிராமம் ,இவைகளை எல்லாம் இந்த பயணத்தில் கண்டீர்களா? அல்லது அது வேறு மார்க்கமா?

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி கீதப்ரியன், உங்கள் ஆலோசனைகளை ஏற்கிறேன்

கிளியனூர் இஸ்மத் said...

உண்மையான சுற்றுலா என்றால் அது உங்களுடையதுதான்....வாழ்த்துக்கள்...எனக்கும் இங்கு போகத்தோன்றுகிறது...விபரம் கொடுங்கள்...!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கண்டிப்பாக சென்று வாருங்கள். இதற்கென நிறைய ஆர்கனைசர்கள் உள்ளார்கள். அவர்கள் மூலம் செல்லலாம்.

அது ஒரு கனாக் காலம் said...

மு மேத்தா .... கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் ...அப்படின்னு ஒரு கவிதை தெகுப்பு பதின்ம வயதில் படிச்சதா ஞாபகம்.. ஆஹா என்ன இடம், உங்களுக்கு என்ன மனோதிடம் இருந்திருக்க வேண்டும் ... இங்கிருந்தே வணங்குகிறேன்

பொன் மாலை பொழுது said...

பல முறை திருக்கயிலாய யாத்திரை என்ற தருமை ஆதீன புத்தகத்தை படங்களுடன் படித்திருந்தாலும், உங்களின் விவரிப்பும் ,விளக்கமும் மிக இயல்பாக அழகாக ரசித்து படிக்க வைக்கிறது. அடுத்த பதிவினை தேடும் ஆவலை உண்டாக்கி ...... நன்றாகவே போகிறது. நீங்கள் இதனை புத்தகமாக கூட வெளியிடலாமே!

Anonymous said...

The explanation that you gave is simply superb.. everyone who is reading this article will definitely think how to go there...