ஏன் பிறந்தோம் என்று இன்று வரை எதற்கும் சலித்துக் கொண்டதில்லை. அப்படி ஒன்றும் வாழ்க்கை சுகமான நீரோட்டமாய் இருந்ததுமில்லை. மேடும், பள்ளமும், கும்மிருட்டுப் பிரயாணமுமாகவே இருந்திருக்கிறது. அடுத்தடுத்து ஆழிப் பேரலைகள் வீசியிருக்கிறது. ஆயினும் எந்தச் சுழலிலும் என் சிரிப்பையும், எழுதுகோலையும் நழுவ விட்டதில்லை. அப்பா அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது உழைப்பு, அதீத நேர்மை. போராடி ஜெயிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். என் வெற்றி எல்லாமே அப்படி கிடைத்தவைதான். நான் தனிமை விரும்பி. மிகச்சிறிய என் வீடே என் சொர்க்கம். புத்தகங்களும், நல்ல சங்கீதமும் ஓவியமும், கிருஷ்ணஸ்மரணையுமாய் எவ்வித குழப்பமுமின்றி அமைதியாய்ச் செல்கிறது வாழ்க்கை. கற்றுக் கொடுப்பவர் எல்லோரும் என் குருவே. கொஞ்சூண்டு அன்பு காட்டினால் கூட நெகிழ்ந்து விடுவேன். என்னைப் பிடிக்கவில்லையா....மௌனமாய் ஒதுங்கி விடுவேன். நேர்மறைச் சிந்தனைகளால் வாழ்க்கைப் படகை ஒட்டிக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் நதி நல்லவர்களால் நிரம்பியது. முகநூல், மற்றும் பதிவுலகம் மற்றுமொரு சாளரமாய் எனக்கு உலகம் காணச் செய்திருக்கிறது. நல்ல நட்புக்கள் இதன் மூலம் கிடைத்திருக்கிறது. கெட்ட குணம் இருக்கிறதா? ஈகோ கெட்ட குணம் எனில் என்னிடம் அது உண்டு. அதையும் விரைவில் விரட்ட வேண்டும். முன்பு முன் கோபம் இருந்தது. இப்போது அது அறவே இல்லை. ஒரு காலத்தில் இருந்த சின்னச் சின்ன ஆசைகள் எல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து விட்டது. கூடிப் பிறப்பதுமில்லை, கூடி மரிப்பதுமில்லை. இதில் எதற்கு அர்த்தமற்ற துவேஷங்கள் ? இத்தனை வருட வாழ்க்கையில் கற்றதும், பெற்றதும், இழந்ததும் நிறைய. என்னைப் பெற்ற தாய் இருக்கிறாள் ஆசீர்வதிக்க. இந்தப் பிறந்த நாளில் நான் பெற்ற முதல் ஆசி அவளிடமிருந்துதான்.
Showing posts with label வித்யா சுப்ரமணியம் அனுபவங்கள். Show all posts

Monday, May 18, 2015
இன்று புதிதாய்ப் பிறந்தேன்.
Labels:
வித்யா சுப்ரமணியம் அனுபவங்கள்
Thursday, November 27, 2014
லூர்து மேரி - பகுதி 2
மீண்டும் லூர்து மேரி. முணுக் முணுக்கென்று கோபம் வந்து விடும் லூர்து மேரிக்கு. அவள் புத்திசாலிதான். தான் புரிந்து கொண்டதை அவளுக்கு சரியாய் விளக்க மொழியறிவு போதுமானதாக இல்லை என்பதுதான் அவளது ஆரம்பகால பிரச்சனையாக இருந்தது. ஆங்கிலம் தமிழ் தவிர இதர பாடங்களில் அவள் எழுத்துப் பிழையுடனோ இலக்கணப் பிழையுடனோ எழுதினாலும் கூட, அவளது விடை, அவளது புரிதலை வெளிப்படுத்துவதாக இருந்தால் அவளுக்கு மதிப்பெண் அளிக்க தயங்க மாட்டார் ஆசிரியை. போகப் போக தமிழ் மொழி வந்து விடும் என்பதால் அவளை ஊக்குவிக்க மதிப்பெண்களை அளித்து விடுவார்.
ஆனால் தமிழ் பாடத்தில் அப்படி மதிப்பெண் அளிப்பது சரியாகாது என்பதால் அவள் ஒற்றை இலக்கத்தில்தான் மதிப்பெண் பெறுவாள். நீ விரைவில் தமிழ் மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும் கற்க வேண்டும் என்று லேசாய் மிரட்டுவது போல் சொல்லுவார்.
லூர்து மேரிக்கு தமிழ் மொழி கற்க இந்த மிரட்டு என்றால் எனக்கு ஆங்கிலப் பாடத்திற்கு மிரட்டல் இலவசம். அவள் ஆங்கில பரீட்சையின் திருத்திய விடைத்தாள் வாங்கும் போது நெஞ்சு நிமிர்த்தி நடந்து செல்வாள். நான் தமிழ் விடைத்தாள் பெறும் போது ரொம்ப பெருமையாக செல்வேன்.
ஒரு முறை டீச்சர் என் ஆங்கில மதிப்பெண்ணுக்கு எல்லோர் முன்னாலும் என்னை திட்ட நான் லஞ்ச் சாப்பிடக் கூட செல்லாமல் உர்ரென்று உட்கார்ந்திருந்தேன். . "எல்லா காளியும் வாங்க என் நாக்குல எழுதுங்க. நான் சூப்பரா எல்லா பாஷையும் பிளந்து கட்டணும். அப்டி செய்தா எல்லா பாஷைகளிலும் உம்மேல கவிதையா பாடறேன் சரியா? காளியோடு பேரம் பேசினேன். காளி இடத்தை காலி செய்து கொண்டு ஓடிப் போயிருப்பாள். அதற்கு பதில் லூர்து மேரி என்னிடம் வந்தாள் . ஐ வில் டீச் யு இங்க்லீஷ் என்றாள். இந்த நாலு வார்த்தைக்கே நான், என்னமா பேசறா இவ என்று வாய் பிளந்தேன். நான் உடனே இ வில் டீச் யு தமிழ் என்றேன் அவள் வார்த்தைகளிலேயே தமிழை மட்டும் சேர்த்து. ஆஹா நானும் என்னமாய் இங்கிலீஷ் பேசறேன்!
அடுத்த நாள் அவள் மத்தியானம் அரைமணி எனக்கு ஆங்கிலமும் நான் சாயங்காலம் அரைமணி அவளுக்கு தமிழும் கற்றுக் கொடுத்தோம். அவள் உடைத்த தமிழில் பேசக் கற்றாள் . என்னை கலாய்க்க வேண்டுமென்றால் வேகமாக மலாயில் பேசிக் கொல்லுவாள். .
அரைப்பரீட்சைக்குள் லூர்து மேரி நன்றாகவே தமிழில் உரையாடத் தொடங்கி விட்டாள் எனலாம். வேறு வழி. சுற்றிலும் தமிழாறு ஓடிக் கொண்டிருந்தால் அவளென்ன செய்வாள்? கற்க வேண்டிய கட்டாயம். வட இந்திய சினிமா நடிகை மாதிரி திக்கி திக்கி பேசுவாள். அதுவும் இனிமையாகவே இருக்கும். போறாததற்கு தமிழ் பாடத்தில் நான் வேறு அவளுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
அரைப் பரீட்சை வந்தது. தமிழ் பரீட்சையன்று லூர்து மேரி படு சீரியசாகவும் வேகமாகவும் எழுதுவதை வியப்புடன் பார்த்தேன். பரீட்சை முடிந்து என் விடைத்தாள்களை குண்டூசியால் இணைத்து குத்தி மடித்து என் பெயரெழுதி டீச்சரிடம் கொடுத்து விட்டு வேகமாக வகுப்புக்கு வெளியில்வந்து விட்டேன். அரை நாள் அதுவும் கடைசி பரீட்சை என்பதால் ஹாலிடே மூடில் வீட்டுக்கு கிளம்பி விட்டேன்.
லீவு முடிந்து மறுபடியும் ஸ்கூல் துடங்கியது. ஒவ்வொரு பேப்பராக மதிப்பெண்களோடு கொடுக்கப் பட்டது. நல்ல காலம் என் ஆங்கில மதிப்பெண் 45. சந்தி சிரிக்கவில்லை. லூர்து மேரிக்கு நன்றி சொன்னேன். அடுத்து தமிழ் பேப்பர். லூர்து மேரி எண்பதுக்கு மேல் வாங்கியிருந்ததாலள். டீச்சர் கை தட்ட சொன்ன போது லூர்து மேரியின் முகம் சூரியனை விழுங்கினாற்போல் ஜொலித்தது. எனக்கு சந்தோஷமாகவே இருந்தது. . அந்த சந்தோஷம் என் மார்க்கை பார்க்கும் வரைதான். நான் 60 க்கும் கீழ் வாங்கியிருந்தேன். என் முகம் சந்திரனை தொலைத்த வானம் போல் இருண்டு விட்டது. சத்தியமாக நான் எதிர்பார்த்ததை விட இது மிகவும் குறைவு. எப்படி குறைந்தது டீச்சரிடம் கேட்கும் தைரியமில்லை. அன்று முழுக்க நான் அசோகா வனத்து சீதை போல் துயரத்திலாழ்ந்திருந்தேன்.
விடைத்தாள்களில் அப்பாவின் கையெழுத்து வாங்க வேண்டும். எல்லாவற்றிலும் பாஸ் என்பதால் என் அப்பா கையெழுத்து போட்டு விட்டார். அடுத்த நாள் ஸ்கூலுக்கு வந்த லூர்து மேரி பிரேயருக்கு முன்பே என்னை அழைத்துக் கொண்டு தமிழ் டீச்சரிடம் போனாள். என் விடைத்தாள்ள கடைசி நாலு பக்கம் என்னுதில்ல. உஷாவுது. அது பறந்து கீழ விழுந்திருக்கு. அது என்னுதுன்னு நினைச்சு நா எடுத்து என் பேப்பரோட குண்டூசி குத்தி கொடுத்திட்டேன். என்று டீச்சரிடம் காட்ட நான் திகைத்துப் போனேன். நாலு பக்கங்கள் குறைத்திருப்பதை நான் எப்படி கண்டு பிடிக்காமல் போனேன் என வெட்கமாக இருந்தது. டீச்சர் வெகுவாக லூர்து மேரியை பாராட்டி அந்த நாலு பக்கத்து மதிப்பெண்களை அவளுடையதிலிருந்து கழித்து என்னுடையதோடு கூட்டி எனக்கு மதிப்பெண் போட்டு விட்டு எங்கள் இருவரையும் பார்த்தால்.
இனிதான் கிளைமாக்ஸ். உஷா நீ உன் பேப்பரை சரிபார்க்காம பறக்க விட்டுட்டு குண்டூசி குத்தினது தப்பு. இதனால் உனக்கு அஞ்சு மார்க் மைனஸ். லூர்து நீ இதை கண்டு பிடிச்சு உன் மார்க் குறைஞ்சாலும் பரவால்லன்னு எங்கிட்ட வந்து இதைச் சொன்ன பார் அதனால உனக்கு அஞ்சு மார்க் போனஸ். என்றாள். அது நியாயமாகவே பட்டாலும், கையெழுத்து வித்தியாசத்தை கண்டுபிடிக்காமல் நீங்கள் எப்படி பேப்பர் திருத்தினீர்கள் என்ற என் கேளிவி, தைரியமில்லாத காரணத்தால் எனக்குள்ளேயே செத்துப் போயிற்று.
லூர்து மேரியும் நானும் ரொம்ப சிநேகமாகி விட்டோம். அனால் முழு பரீட்சை முடித்த கையேடு அவளை அவள் அப்பா டிசி வாங்கி அழைத்துச் சென்று விட்டார். வகுப்பில் எல்லாருமே அவள் போவதற்காக வருத்தப் பட்டார்கள். நான் நிறைய. ஆனால் அவள் சிரித்துக் கொண்டே சந்தோஷமாக கிளம்பி விட்டாள் . சொந்த பந்தங்களோடு இருக்கப் போகும் சந்தோஷமாயிருக்கக் கூடும்.
இத்தனை காலம் கழித்து ஏதோ ஒரு குழந்தையால் லூர்து மேரியின் நினைவு வந்தது வியப்பாயிருக்கிறது. லூர்து மேரி எங்கிருக்கிறாய் நீ.? என்னை உனக்கு நினைவிருக்கிறதா? தமிழ் பேசிக் கொண்டிருக்கிறாயா இல்லை மறந்து விட்டாயா தமிழையும்?

lலூர்து மேரி - பகுதி 1
நேற்று அபிராமபுரத்திலிருந்து நடந்து வரும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. அந்த நேரம் எனக்கு லூர்து மேரியின் நினைவு வந்தது. அந்த காட்சி என்ன என்பதை கடைசியில் சொல்கிறேன். முதலில் லூர்து மேரியைப் பற்றி.
நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது. அவள் புது அட்மிஷனாக வந்து சேர்ந்தாள். நான் கடைசி பெஞ்ச். லூர்து மேரியை எனக்கு துணையாக என் பக்கத்தில் உட்காரச்சொல்லி அனுப்பினார் டீச்சர். இந்திராகாந்தி மாதிரி நீண்டு கூர்மையான மூக்கு, சின்ன கண்கள், மெலிந்த தேகம், குச்சி குச்சியாய் ரெட்டை சடை. டக் டக்கென்று செருப்புகள் சப்திக்க என்னருகில் வந்து உட்கார்ந்தாள். ஆரம்பத்தில் சட்டென்று பேச ஒரு தயக்கம். அவளும் பேசவில்லை. நானும் பேசவில்லை. பிறகு மெதுவாக பேரென்ன என்றேன். என்னை முறைத்து பார்த்து விட்டு லூர்து மேரி என்றாள். என் பேர் உஷா என்றேன் அவள் கேட்காமலே. இதுக்கு முன்னாடி எங்க படிச்ச? எனது அடுத்த கேள்வி இது. அதற்கு அவள் சொன்ன பதில் எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. என்ன சொன்ன? மறுபடியும் கேட்டேன். அவள் மீண்டும் அதைத் திரும்பச் சொன்ன போது அது நிச்சயமாகத் தமிழ் மொழி இல்லை என்பது புரிந்தது. இது என்ன மொழி என்று கேட்டாலும் அவள் சொல்லப் போகும் பதில் எனக்கு புரியுமா என்பது சந்தேகம்.
ஏற்கனவே என் நெருங்கின சிநேகிதியையும் என்னையும் சேர்ந்து உட்கார விடாத வருத்தத்தில் இருந்த எனக்கு இப்படி பாஷை தெரியாத பெண் வேறு பக்கத்தில் வந்து படுத்த வேண்டுமா என்ற வருத்தம் கூடியது. லஞ்ச் நேரம் எல்லாரும் சாப்பிடப் போன போது எங்கள் பேச்சு முழுக்க லூர்து மேரியைப் பற்றிதான். சில சி.ஐ.டி. சிங்கங்கள் அவளைப் பற்றி அத்தனை தகவல்களையும் எப்படியோ கண்டு பிடித்திருந்தனர்.
அவ வெளியூராம். மலாயா பக்கமாம். தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியுமாம். அவ நல்லா தமிழ் கத்துக்கணும்னுதான் இங்க வந்து தமிழ் மீடியத்துல சேர்த்து விட்டுட்டாராம் அவங்கப்பா. ஹாஸ்டல்லதான் இருப்பாளாம். இங்கிலீஷ் ஓரளவுக்கு பேசுவாளாம்.
சரிதான். என் நேரம் சரியில்லைதான் போலருக்கு என்று நான் நொந்து போனேன். அவளுக்கு தமிழ் வராது என்பதை விட அவள் ஆங்கிலம் தெரிந்தவள் என்பதுதான் என் கவலைக்கு காரணம். நமக்கு ஆங்கில அட்சராப்பியாசம் ஆரம்பித்ததே ஐந்தாம் வகுப்பில்தான். அதனால் அவள் என்னிடம் ஆங்கிலத்தில் ஏதாவது பேசி விடப் போகிறாளோ என்று எனக்கு தொடை நடுங்கியது. இனி அவள் பக்கம் திரும்பவே கூடாது என்ற முடிவோடு லஞ்ச் முடித்து வந்து அமர்ந்தேன்.
வகுப்பு ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் லூர்து மேரி திடீரென்று எழுந்து "பண்ணா பண்ணா என்று அலறினாள். டீச்சர் தூக்கி வாரிப்போட போர்டிலிருந்து தலையைத்திருப்பிப் பார்த்தாள். "பண்ணா பண்ணா" அவள் மீண்டும் கத்த டீ ச்சர் என்னைப் பார்த்தாள் . "
"ஏய் உஷா என்ன பண்ண அவள? "
"அய்யோ நா ஒண்ணும் பண்ணல டீச்சர்! "
டீச்சர் லூர்து மேரியைப் பார்த்து என்ன என்பது போல் செய்கையால் கேட்டாள்
லூர்து மே ரிக்கு முகம் சிவந்தது. கீழே குனிந்தவள் என் காலிலிருந்த செருப்பைக் கழட்டி கண்ணகி சிலம்பைப் பிடித்திருப்பது மாதிரி தூக்கி வைத்துக் கொள்ள மொத்த வகுப்பும் அவள் என்னை அடிக்கப் போகிறாளா அல்லது டீச்சரையா என்று மிரண்டு போ ய் பார்த்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. நானோ பயத்தில் சர்வ நாடியும் ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்தேன்.
லூர்து மேரி அடுத்த கணம் என் செருப்பை கீழே போட்டு விட்டு வேகமாய் நடந்தாள் . டீச்சரிடம் ஏதோ செய்கை செய்து விட்டு வகுப்புக்கு வெளியில் ஓடினாள் அவள் திரும்பி வந்த போது அவள் கையில் அவளது செருப்புகள். அதை டீச்சரிடம் காட்டி " பண்ணா" என்ற படி தன் காலில் அணிந்து கொண்டு சிரித்த படி வந்து உட்கார்ந்தாள் . அப்புறம்தான் புரிந்தது செருப்புக்கு அவளது பாஷையில் பண்ணா என்று பெயர் என்பது. சாப்பிட்டு வரும்போது செருப்பை அணிய மறந்து வந்திருக்கிறாள். அதற்குதான் இத்தனை அமர்க்களம்.
அதற்குப்பிறகு எங்கள் செருப்புகளும் பண்ணா என்றே பெயர் பெற்றன
அபிராமபுரத்தில் என்ன பார்த்தேன் என்று சொல்லி விடுகிறேன். ஒரு பெண்மணி குழந்தையோடு சென்று கொண்டிருக்க அவள் இடுப்பிலிருந்த ஒரு ரெண்டு வயது குழந்தை திடீரென்று அழுதது. இவள் ஏன் அழறடி செல்லம் அது இது என்று கேட்க அந்த குழந்தை மழலையில் இப்பல் இப்பல் என்று சொல்ல அந்த பெண்மணிக்கு அது என்ன சொல்கிறதென்று புரியவேயில்லை. நான் தயங்கி தயங்கி அவர்களருகில் கைப்பையில் எதையோ எடுப்பது போல் நின்று கவனித்தேன்.
குழந்தை அவள் இடுப்பை விட்டு இறங்கி தன காலை தூக்கி தூக்கி காட்டியது. அப்போதும் புரியவில்லை. அதற்கு வந்ததே கோபம், அந்த பெண்ணின் செருப்பை பிடித்து இழுத்து "இப்பல்ல்ல் .." என்று கத்தியது.
ஒ உன் செப்பல் போட்டுக்கலையா என்று அந்த பெண்மணிக்கு அப்போதுதான் புரிய அவள் மீண்டும் வீடு நோக்கி திரும்பிச் செல்ல எனக்கு லூர்து மேரியின் நினைவு வந்தது.
அவளைப்பற்றி இன்னொரு சுவாரசியமான சம்பவமும் அடுத்த பதிவில் எழுதுகிறேன். லூர்து மேரியை நினைவு படுத்தின குழந்தைக்கு நன்றி.

Saturday, March 22, 2014
கடவுள் விளம்பரம்
நான் ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கிற காலத்தில் எனக்கு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. ஏதோ ஒரு கடவுளைப் (நினைவில்லை) புகழ்ந்து எழுதி இதை இருபது பேருக்கு நகல் எடுத்து அனுப்பவேண்டும், அப்படிச் செய்தால் ஒரு வாரத்திற்குள் நீ நினைத்ததெல்லாம் நடக்கும். தவறினால் இன்றிரவுக்குள் நீ ரத்தம் கக்கி சாவாய் என்று எழுதப் பட்டிருந்தது. அப்படி ஒரு பயம் எனக்கு. என் உண்டியலில் இருந்த காசை மறைத்து எடுத்துச் சென்று போஸ்ட் கார்ட் வாங்கி மாங்கு மாங்கென்று இம்பொசிஷன் போல் அதை எழுதி எனது பள்ளித் தோழிகள் சொந்தங்கள் எல்லோருக்கும் அனுப்பி விட்டு வந்து விட்டேன்.
அன்றிரவு நான் என்னென்ன நினைத்து அவை நடக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் கற்பனை வேறு. எனக்கு நேந்திரங்காய் சிப்ஸ் மிகவும் பிடிக்கும். ஒரு அரை கிலோ எனக்கு வீட்டில் வாங்கித் தர வேண்டும், அதற்கு யாரும் பங்குக்கு வந்து விடக் கூடாது. நான் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பெரிய ரப்பர் பந்து காணாமல் போயிருந்தது, அது கிடைத்து விடவேண்டும். கணக்கில் நான் வீக். எனக்கு கணக்கு நன்றாய் வந்து 100க்கு 100 வாங்க வேண்டும். மஹா கவி காளிதாஸின் நாக்கில் காளி எழுதி அவர் கவியாய் மாறியது போல் விடிந்தால் நானும் சரளமாக, ஆங்கிலேயனே வெட்கப்படும் அளவுக்கு ஆங்கிலத்தில் பேசித்தள்ள வேண்டும், என்னோடு டூ விட்டிருந்த என் தோழி என்னிடம் மீண்டும் பேசி விட வேண்டும், நான் கிளாஸ் லீடராக வேண்டும் இப்படி நிறைய விஷயங்கள், நான் 20 பேருக்கு கார்ட் அனுப்பி விட்ட காரணத்தால் ஒரு வாரத்தில் எனக்கு லபித்து விடும் என்ற சந்தோஷத்தோடு தூங்கிப்போனேன்.
அதில் ஒரு தோழி அவளது வகையாக எனக்கே ஒரு கார்ட் எழுதி அனுப்ப, மீண்டும் நான் பயத்தில் உறைந்து போனேன். என் உண்டியலிலும் காசில்லை. அம்மாவிடம் கேட்டால் நிச்சயம் தர மாட்டாள். அவளுக்கு என் கஷ்டமெல்லாம் புரியாது. கடவுளே நான் என்ன செய்வேன் என்று பயத்தில் உறைந்து போனேன். கையாலாகாதவாலாக படுத்துக் கொண்டேன். பாதி ராத்திரி திடுக்கிட்டு எழுவேன். வாயெல்லாம் தொட்டு பார்ப்பேன் ரத்தம் வடிகிறதா என்று. சந்தேகத்திற்கு உள்ளறைக்கு சென்று பீரோ கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டு அப்படி எதுவும் நடக்கவில்லை என்றாலும், விடிவதற்குள் நான் ரத்தம் கக்கி செத்து விடுவேன் என்று தூங்காமல் தவித்ததை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. அந்த குழந்தைத்தனம் தொலைந்து விட்டதற்காக லேசான வருத்தமும் ஏற்படுகிறது.
இதை எதற்கு சொல்கிறேன் என்றால் முன்பு போஸ்ட் கார்டில் வந்து பயமுறுத்திய விஷயம் இப்போது முக நூலிலும் தொடர்கிறது. ஒரு புகைப்படத்தை போட்டு அதனை ஷேர் செய்தால் நினைத்தது நடக்கும் என்கிறார்கள். மனிதர்கள் மாறவே இல்லை. கம்ப்யூட்டர் காலத்திலும் மூட நம்பிக்கை குறையவில்லை.தெய்வத்தை உணர்ந்தவர்களிடம் அதன் மீது அன்பும் பக்தியும் மட்டுமே இருக்கும். பயமிருக்காது.

கடவுள்,
வித்யா சுப்ரமணியம் அனுபவங்கள்
Subscribe to:
Posts (Atom)