Thursday, December 5, 2013

மொட்டை மாடி தோட்டம்

நேற்று  கிருஷ்ணமுர்த்தி  மாமா வீட்டிற்கு  அவர் வீட்டு மொட்டை  மாடி தோட்டத்தைப் பார்ப்பதற்காகவே  போயிருந்தேன்.    CSK  மாமா  மாமியுடன் 2006 ல் இருந்து  3 முறை  கயிலாயமும்,  ஆதி  கயிலாயமும்  சென்று வந்திருக்கிறேன்.   அவர் வயது 73.   சிறந்த சிவபக்தர்.  விங் கமாண்டர் அக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  முதுமையை எப்படி பயனுள்ளதாய் கழிக்க முடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

நமது பாரம்பரிய மூலிகைகளின் மீது மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்.    தோட்டக் கலையில் அபார ஈடுபாடு உள்ளவர். மொட்டைமாடியில்  அபூர்வ மூலிகைச் செடிகளையும் இதர செடிகொடிகளையும்  வளர்த்து வருகிறார்.  பார்க்கவே பிரம்மிப்பாய் இருக்கிறது.   நம் ஆரோக்கியத்தை எப்படி  எல்லாம் பேணலாம் என்பதற்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார்.   காலை மாலை நேரங்களில் அந்த செடி கொடிகளுடன் அளவளாவியவாறு  நடை பழகுவது  கூட  தியானத்தின் ஒரு பகுதியாகவே எனக்குத் தோன்றியது.    

ஒவ்வொரு செடியையும்  தன குழந்தை மாதிரி பெருமையுடன் அறிமுகப் படுத்தினார்.  அவரது அன்பில் செழித்து வளர்ந்திருக்கின்றன அந்த குழந்தைகள். மொட்டைமாடியே பசுமையாக இருக்கிறது.  தக்காளி, கத்திரி, அகத்திக் கீரை,  லெமன் கிராஸ்,  அன்னாசி,  சித்தரத்தை,    வில்வம்,   திருநீற்று பச்சை என்று   பல்வேறு மூலிகைகளுமாய்  மொட்டை மாடியே மணம் வீசிக் கொண்டிருக்கிறது.  பெப்பர்மென்ட் செடியின் ஒரு இலையைக் கொடுத்து உண்ணச் சொன்னார். வாயெல்லாம் பெப்பர்மென்ட் வாசம்.

இன்சுலின் செடியின் இலை மெலிதான புளிப்புடன் இருக்கிறது.  சர்க்கரை நோய்க்கு அருமையான மருந்தாம் அது. தினம் ஒரு இலை சாப்பிட்டால் கணையத்தை வலுப்படுத்தி இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்யுமாம். இன்சுலின் செடியை பல பேருக்கு இலவசமாகவே கொடுப்பதாகக் கூறி எனக்கும் ஒன்று கொடுத்தார்.  கூடவே பெப்பர்மென்ட் செடியும் ஒன்று கொடுத்தார்.   கற்றாழை போல்  அடுத்தடுத்து பெருகி வளரக் கூடியவை என்றும் சொன்னார்.   என் வீட்டில் இரண்டு செடியையும் வைத்து தண்ணீர் ஊற்றி  பேசத் தொடங்கி விட்டேன்.  

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?  என்ற வைர வரிகள் நினைவுக்கு வருகிறது.   நாம் நமது  பாரம்பரிய உணவுகளையும் மருத்துவ மூலிகைகளையும்  மறந்து  விட்டு  நம் கலாச்சாரங்களை மாற்றிக் கொண்டதால்தான்  தமிழகம்  சர்க்கரை நோயின் தலைநகரமாக மாறி  விட்டது. கேன்சர்  போன்ற உயிர்க் கொல்லி நோய்கள்  நமக்கிடையே பெருகி வருகிறது.  கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? . விழித்துக் கொள்ளுங்கள் இளைஞர்களே.

                                                                                                                                                            

 எலுமிச்சை 
திருநீற்று பச்சை 

 அகத்திக் கீரை 

செத்தி 

 இன்சுலின் 

கொடி  எலுமிச்சை 

லெமன் கிராஸ் 

மயில் மாணிக்கம் 

நித்ய கல்யாணி 

நித்ய கல்யாணி 

சித்தரத்தை 

அன்னாசி 

தக்காளி 

வாஸ்து செடி 

வில்வம் 13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள பசுமையான பதிவும் படங்களும் அருமை.

பகிர்வுக்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

படங்களும் பகிர்வும் அழகு...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எனக்கு கொஞ்சம் இடம் இருக்கிறது..யாராவது guide பண்ணினால் தேவலை மூலிகை தோட்டம் அமைப்பேன்.

நிலாமகள் said...

நல்லதொரு பின்பற்ற வேண்டியதொரு செயல்!! நீங்க லெமன் கிராஸ் என்று காட்டும் புல்வகையை சித்தரத்தை என்றல்லவா இத்தனை நாள் நினைத்திருந்தேன்...?! சரிபார்க்கவும்.

ADHI VENKAT said...

சிறப்பான பகிர்வு...

கே. பி. ஜனா... said...

பயனுள்ள பகிர்வு!

கீதமஞ்சரி said...

பார்க்குமிடமெல்லாம் பசுமை மனம் கொள்ளை கொள்கிறது. மனத்துக்கும் உடலுக்கும் ஒருசேர மகிழ்வளிக்கும் தோட்டம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அனைவருக்கும் மிக மிக நன்றி. ஆரண்ய நிவாஸ் சார், முகநூல் பக்கத்தில், CSK அவர்களது முகவரியும் தொலைபேசி எண்ணும் உள்ளது. அவரிடம் பேசினால் ஆலோசனை கூறுவார்.

Krishnakumar Sathiyawageeswaran said...

அன்புள்ள எழுத்தோவியருக்கு தங்களின் பன்முக பட்டியல் நீண்டு- இயற்கை வழி வேளாண்மைக்கும் நீண்டது மிக்க மகிழ்ச்சி. இன்றைய அவசிய தேவை இயற்கை வழி வேளாண்மையே. நகரத்து வாசிகள் அனைவரும் மாடிதோட்டம் அமைப்பது அவசியம் .நமக்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்வோம்.

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்களுக்குப்பின் உங்களிடமிருந்து ஒரு அருமையான பதிவு! மிகவும் உபயோகமானதும் கூட! சென்னை வந்தால் அவசியம் திரு. CSK அவர்களைப்பார்க்க வேண்டும். நான் முக நூல் பார்ப்பதில்லை. அவரது முகவரி, தொலைபேசி எண்ணை இங்கே எழுத இயலுமா?

Angel said...

உங்களுடைய இந்த மாடிதோட்டம் பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கேன்
http://blogintamil.blogspot.co.uk/2014/05/blog-post.html

NAGARAJAN said...

கிருஷ்ணமுர்த்தி சார் அவர்களின் தொடர்புக்கு உண்டான முகநூல் இணைப்பினைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.