Friday, November 26, 2010

சென்ற வாரம் காந்தி சிலையருகில்

சென்ற வாரம் கடற்கரை சாலையில் நடந்தது இது. காந்தி சிலையருகே
பாரீஸ் முனையிலிருந்து திருவான்மியூர் வழியே செல்லும் மாநகரப் பேருந்து ஒன்று சிக்னலுக்காக மெதுவே வந்து நிற்பதற்கு முன் அதிலிருந்து ஒருவர் சிக்னலில் அவசரமாக அப்படியே கீழே குதிக்கிறார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? இருக்கிறது.

அவர் கீழே குதித்த அதே நேரத்தில் பேருந்தை ஓட்டி வந்து கொண்டிருந்த ஒரு பைக் ஓட்டுனர் மீது அவர் மோத, அந்த பைக் ஓட்டுனர் மட்டும் எகிறிச் சென்று நடைபாதையில் நிலைகுலைந்து விழ, அவரது பைக்
ஆளில்லாமல் அதுபாட்டுக்கு சற்று தூரம் ஓடி பேருந்து ஒன்றில் இடித்து கீழே விழுந்தது. ஆபத்து எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள். அந்த பைக் ஓட்டி எந்த சாலை விதியையும் மீறவில்லை. ஆயினும் சாலை விதியை மீறி ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில் ஒரு மனிதன் சடாரென கீழே குதித்ததால் ஒரு தவறும் செய்யாத அந்த பைக் ஒட்டிக்கு சரியான அடி.

இதை விதி என்று சொல்ல நான் தயாரில்லை. இந்தியாவில் யாரும் சட்டங்களையும் சரி சாலை விதிகளையும் சரி மதிப்பதில்லை. சிறிய தவறுகளோ பெரிய தவறுகளோ தண்டனை என்று ஒன்று இருந்தால்தான், தனி மனித ஒழுக்கம் மேம்படும். அமெரிக்காவில் அதிபரின் மகனோ மகளோ சாலை விதியை மீறினாலும் தண்டனை உண்டு. இங்கோ சாதாரண அடியாளுக்கு கூட ராஜ மரியாதை.

டிராபிக் போலீசுக்கு பணம் கொடுத்து விட்டால் குற்றவாளி கூட நிரபராதி. அந்த பைக் ஒட்டிக்கு நேற்று நடந்தது நாளைக்கு நமக்கும் நடக்கலாம். இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? எல்லா பேருந்துகளிலும் அவசியம் தானியங்கி கதவுகள் இருக்க வேண்டும். அவைகள் பேருந்து நிறுத்தங்களில் மட்டுமே திறக்க வேண்டும். பேருந்து புறப்பட்டதும் ஓடி வந்து யாரும் ஏறவும் முடியாது. ஓடும் பேருந்திலிருந்து இறங்கவும் முடியாது. இனி ஒரு விதியை இனியாவது செய்யுமா நம் அரசு? ஸ்பெக்ட்ரம் எழுப்பும் சப்தத்தில் நம் கூப்பாடு யாருக்கு கேட்கப் போகிறது? இருப்பினும் ஊதும் சங்கை ஊதுவது நம் கடமை. ஊதியாயிற்று.

19 comments:

Rekha raghavan said...

தேவையான பதிவு. மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புவோம்.

R. Gopi said...

இந்த விஷயத்தில் பெங்களூர் தேவலாம். இங்கே எல்லாப் பேருந்துகளுக்கும் கதவுகள் உண்டு.

நீங்கள் நிறைய புத்தகம் எழுதி உள்ளதாக அறிகிறேன். நிறைய பரிசுகளும் வாங்கி உள்ளீர்கள் என்றும் தெரிகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் புத்தகங்கள் சென்னையில் எங்கே கிடைக்கும்? அடுத்த முறை சென்னை வரும்போது (ஜனவரி நான்காம் தேதிக்குள் எப்படியும் ஒருமுறை வருவேன்)எல்லாவற்றையும் வாங்கி விடுகிறேன்!

KANA VARO said...

விழிப்புணர்வு வேண்டும்.

raji said...

தானியங்கி கதவுகள் உள்ள பேருந்திலும் கூட பயணிகள் படியில் நின்று பயணம் செய்வதால் அக்கதவுகள் மூட இயலாது போகின்றது.ஒவ்வொரு தனி மனிதரும் தன் ஒழுக்க கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் மட்டுமே இம்மாதிரி சம்பவங்கள் நிகழ்வதை தடுத்தல் இயலும்

a said...

சென்னயில் பைக்கில் செல்கயில் நானும் இதுபோல் அவஸ்தைப்பட்டதுண்டு.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பின்னூட்டங்களுக்கு நன்றி. ராஜி நீங்கள் சொல்வது சரிதான். எந்த ஒரு நல்ல மாற்றத்திற்கும் தனி மனித ஒழுக்கம் அவசியம். அதே நேரம் சட்டங்கள் கடுமையாக இருந்தால் அட்லீஸ்ட் அதற்கு பயந்தாவது ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

கோபி நீங்கள் படிக்கும் புத்தகங்களோடு ஒப்பிட்டால் நான் ஒன்றும் பெரிய எழுத்தாளரல்ல. இருப்பினும் சில புத்தகங்களை உங்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.
கான்க்ரீட் மனசுகள்.(சிறு கதை தொகுப்பு)
ராமர் பாதம் (சிறுகதை தொகுப்பு)
அக்னி புத்ரி ( புராணங்களில் பெண்கள் )
ஆசை முகம் மறந்தாயோ
ஆகாசத் தூது
அவள் முகம் காண (பார்ட் 2 of ஆசை முகம் மறந்தாயோ)
தென்னங்காற்று
கோபுரகலசங்கள்
பரசுராமன்
உப்புக் கணக்கு
எனது புத்தகங்கள் அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும் தேவி வெளியீட்டிலும் கிடைக்கும்.
சென்னை வந்தாள் கண்டிப்பாக வீட்டிற்கு வாருங்கள். விலாசம் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறேன்.

ராமலக்ஷ்மி said...

அவசியமான பதிவு. கவனிக்குமா அரசு?

உங்கள் புத்தகங்கள் பற்றிய விவரங்கள் கண்டேன். வாய்ப்புக் கிடைக்கையில் வாங்குகிறேன்.

snkm said...

நல்ல பதிவு! நிச்சயமாக இப்போது இது தேவை. எல்லோருமே அடுத்தவர்களைக் குறை சொல்லிக் கொண்டு தாங்கள் ஒழுங்காக விதிகளைக் கடைபிடிப்பதில்லை. அரசும் முதலில் நல்ல சாலைகளைப் பராமரிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சென்னை மாநகருக்குள்ளே, ஒரு சில இடங்களை மோட்டாரில் பயணிக்க முடியாதபடி செய்து, அந்த சாலைகளின் இணைப்பில் சிறிய நன்கு சக்கரம் கொண்ட டாட்டா தயாரிப்பு போன்ற வண்டிகளைப் பயன் படுத்தலாம். பேருந்துகளை அதிகமாக இயக்கினாலே இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. நன்றி!

Unknown said...

இந்த விதிமீறல்கள் இங்கு சர்வசாதரனமாகி போனதற்கு நாமே காரணம் .

வார்த்தை said...

//அந்த பைக் ஒட்டிக்கு நேற்று நடந்தது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்.//

இந்த விடயம் என்று மட்டுமல்ல பொதுவாகவே இன்று அடுத்தவுனுக்கு நடப்பது நாளை நமக்கும் நடக்குமே என்ற உணர்வு பெரும்பான்மையானவர்க்கு இல்லாததால் தான் நாடு இந்த நிலமையில் உள்ளது.
சில உதாரணம்: லஞ்சம், தனியார் துறையிலும்; மீட்டர் இல்லா ஆட்டோ; சில்லறையை அமுக்கும் கண்டக்டர்

priyamudanprabu said...

ஸ்பெக்ட்ரம் எழுப்பும் சப்தத்தில் நம் கூப்பாடு யாருக்கு கேட்கப் போகிறது? இருப்பினும் ஊதும் சங்கை ஊதுவது நம் கடமை.
///


aamam athai seivom

மனோ சாமிநாதன் said...

அன்பு வித்யா!

மிக‌ அருமையான‌ ப‌திவு!

எப்படி இருக்கிறீர்கள்? என்னை நினைவிருக்கிறதா? உங்களின் வலைப்பூ தற்செயலாகக் கண்டதும் மகிழ்வாக இருந்தது. சமீப காலமாக உங்களின் நாவல் எதுவும் வருவதில்லையே, ஏன்? உங்களின் பெரும்பாலான நாவல்கள் என் லைப்ரரியில் உள்ள‌ன. மாத நாவல்கூட உங்களுடையது எதுவும் ரொம்ப நாட்களாக வரவில்லை. வந்தால் வாங்கி வைக்கும்படி என் மானேஜரிடம் கூறியிருக்கிறேன். சென்ற வாரம்தான் 'தவமிருந்தேன், வரம் த‌ருவாய்' மாத நாவலை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். இனிதான் படிக்க வேண்டும்.

'உன்னிட‌ம் ம‌ய‌ங்குகிறேன்' நாவ‌லை ஏன் குறிப்பிட‌வில்லை?

தினேஷ்குமார் said...

விதி விளையாடிய
காலம் முற்றிற்று
முன் ஒரு நாளில்
சுயம் விளையாடும்
இச்சைகள்
வெல்லும் உலகு,,,,,,,,,
திருந்தாத ஜென்மங்கள்
இருந்தென்ன பயன்
திருத்தப்பட வேண்டும்
இல்லையேன்
வருத்தப்பட பயனில்லை....

திருந்துமா திருத்துவோமா என பொறுத்திருந்து பார்ப்போம்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//போலீசுக்கு பணம் கொடுத்து விட்டால் குற்றவாளி கூட நிரபராதி//

இப்படிப்பட்ட சூழலில் யாரும்
தன்னைத் திருத்திக் கொள்:ளத்
தயாரில்லை. அடுத்தவரைத்தான்
திருத்தப் பார்க்கிறார்கள்.
எனினும் அரசு செவி கொடுக்குமா
உங்கள் இந்த பாதுகாப்பு
யோசனைக்கு?
முட்டுவோம்; கதவைத் தட்டுவோம்;
திறக்கும் என நம்புவோம்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

டியர் மனோ.
ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் இணையத்தில் இவ்வளவு எழுதி இருப்பதே இப்போதுதான் தெரியும். எப்படி இருக்கிறீர்கள். நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். மாத நாவல் சற்று குறைத்துக் கொண்டேன். மற்றபடி நல்ல புத்தகங்கள் நேரடியாக வந்து கொண்டிருக்கிறன. நீங்கள் கூடத்தான் உங்கள் favourite books இல் உன்னிடம் மயங்குகிறேனைக் குறிப்பிடவில்லை. சமீபத்தில் உப்புக் கணக்கு என்ற புதினம் எழுதி உள்ளேன், கிடைத்தால் வங்கிப் படிக்கவும். நன்றி.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள வித்யா!

உங்கள் பதில் மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

என்னுடைய உங்களைப்பற்றி மட்டுமல்ல, நான் எப்போதுமே ரசிக்கும் 'அகிலன்', அனுராதா ரமணனின் ' மன ஊஞ்சல்', ப.கோ.பிரபாகரின் சில எழுத்துக்கள், சூடாமணி‍ இப்படி நிறைய பேரை எழுதவில்லை. ப்ளாக் ஆரம்பபித்த புதிதில் ஒரு தயக்கம் இருந்த காரண‌த்தால் பெரிய லிஸ்ட் வேண்டாமென்று நினைத்து விட்டதுதான் காரணம். என்னை மிக‌வும் பாதித்த‌ சில‌வ‌ற்றை ம‌ட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் 'உன்னிட‌ம் ம‌ய‌ங்குகிறேன்' ப‌டித்து, ர‌சித்து, உங்க‌ளைப்பாராட்ட‌ வேண்டுமென்றே உங்க‌ளை சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்குமென்று நம்புகிறேன்.. அத‌னால்தான் உங்க‌ளிட‌ம் அது ப‌ற்றிக் கேட்டிருந்தேன்.

தஞ்சையில் நான் எப்போதும் புத்தகம் எடுக்கும் லைப்ரரியில் அதன் உரிமையாளர் மற்ற‌ எழுத்தாளர்களைப்பற்றி பேசும்போதெல்லாம், ஏன் நான்கு மாதங்களுக்கு முன்பு கூட, 'புத்தகத்தை கையில் எடுத்தால் நடுவே கீழே வைக்க முடியாத அளவு வேக நடையும் சுவாரஸ்யமும் விதயா சுப்ரமண்யத்தில் எழுத்தில் மட்டும்தான் நான் பார்க்க முடிகிறது. அந்த அளவு ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் வேறு யாரும் தற்போது எழுதுவதில்லை' என்று விவாதித்து விட்டு வந்தேன்.

'உப்புக்க‌ண‌க்கு' ப‌டித்து விட்டேன். மிக‌ அழுத்த‌மான‌, யாரும் தொடாத‌ க‌தைக்க‌ள‌த்துட‌ன் மிக‌ ந‌ன்கிருந்த‌து. உங்க‌ள் மாத‌ நாவ‌ல்க‌ளை ம‌ட்டும் சேமித்து வைத்துக்கொன்டிருக்கிறேன். ப‌ய‌ண‌ங்க‌ளில்தான் அவ‌ற்றை ப‌டிப்ப‌து ப‌ழ‌க்க‌ம்.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள வித்யா!

உங்கள் பதில் மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

என்னுடைய உங்களைப்பற்றி மட்டுமல்ல, நான் எப்போதுமே ரசிக்கும் 'அகிலன்', அனுராதா ரமணனின் ' மன ஊஞ்சல்', ப.கோ.பிரபாகரின் சில எழுத்துக்கள், சூடாமணி‍ இப்படி நிறைய பேரை எழுதவில்லை. ப்ளாக் ஆரம்பபித்த புதிதில் ஒரு தயக்கம் இருந்த காரண‌த்தால் பெரிய லிஸ்ட் வேண்டாமென்று நினைத்து விட்டதுதான் காரணம். என்னை மிக‌வும் பாதித்த‌ சில‌வ‌ற்றை ம‌ட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் 'உன்னிட‌ம் ம‌ய‌ங்குகிறேன்' ப‌டித்து, ர‌சித்து, உங்க‌ளைப்பாராட்ட‌ வேண்டுமென்றே உங்க‌ளை சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்குமென்று நம்புகிறேன்.. அத‌னால்தான் உங்க‌ளிட‌ம் அது ப‌ற்றிக் கேட்டிருந்தேன்.

தஞ்சையில் நான் எப்போதும் புத்தகம் எடுக்கும் லைப்ரரியில் அதன் உரிமையாளர் மற்ற‌ எழுத்தாளர்களைப்பற்றி பேசும்போதெல்லாம், ஏன் நான்கு மாதங்களுக்கு முன்பு கூட, 'புத்தகத்தை கையில் எடுத்தால் நடுவே கீழே வைக்க முடியாத அளவு வேக நடையும் சுவாரஸ்யமும் விதயா சுப்ரமண்யத்தில் எழுத்தில் மட்டும்தான் நான் பார்க்க முடிகிறது. அந்த அளவு ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் வேறு யாரும் தற்போது எழுதுவதில்லை' என்று விவாதித்து விட்டு வந்தேன்.

'உப்புக்க‌ண‌க்கு' ப‌டித்து விட்டேன். மிக‌ அழுத்த‌மான‌, யாரும் தொடாத‌ க‌தைக்க‌ள‌த்துட‌ன் மிக‌ ந‌ன்கிருந்த‌து. உங்க‌ள் மாத‌ நாவ‌ல்க‌ளை ம‌ட்டும் சேமித்து வைத்துக்கொன்டிருக்கிறேன். ப‌ய‌ண‌ங்க‌ளில்தான் அவ‌ற்றை ப‌டிப்ப‌து ப‌ழ‌க்க‌ம்.

"உழவன்" "Uzhavan" said...

//இங்கோ சாதாரண அடியாளுக்கு கூட ராஜ மரியாதை.//
 
இப்போது இங்கே நடப்பது மன்னராட்சிதானே... அப்படித்தான் இருக்கும் :-)