Sunday, January 6, 2013

நீண்ட நாள் கழித்து....

எனதருமை  பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்.   என்னடா இவ்வளவு மாதங்களாய் காணவே இல்லையே என்று யோசிக்கக் கூடும்.    அதற்கு முதல் காரணம் என் பதி வுப் பக்கத்திற்கு என்னால் லாகின் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.   தவிர வேறு சில பணிச்சுமைகளும் ஒரு காரணம்.


 முதலாவது சென்ற ஆண்டின் ஆரம்பத்தில் பொங்கலன்று நள்ளிரவில் எங்கள் அலுவலகம் எரிந்து போனது.  எங்கள் அனைவரது பணிப் பதிவேடுகள் அனைத்தும் முற்றிலும் சாம்பலாகிப் போனது. இதனால் என்னால் விருப்ப ஓய்வு எடுக்க முடியாத சூழல்.  மறுபடியும் இருக்கிற  விவரங்களை வைத்துக்கொண்டு பணிப்பதிவேடு துவங்குவதிலிருந்து அலுவலகத்தின் அனைத்து கோப்புகளையும் புத்தாக்கம் செய்யும் பணிச்சுமை.       


இரண்டாவது,  என் சின்னப்  பெண்ணுக்கு வரன் தேடும் படலம்.  (இதன் மூலம் கிடைத்த சுவையான அனுபவங்கள்  ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு இருக்கிறது)   


மூன்றாவது  என் சின்ன அக்காவின் திடீர் மரணம்.  இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவே இல்லை.    இரண்டு வருடமாய் உள்ளுக்குள் வளர்ந்திருந்த புற்று நோய் வெளியிலேயே தெரியாமல் இருந்து விட்டு திடீரென அவளை இருபதே நாளில்  வேரோடு வீழ்த்தி சாய்த்து விட்டது.       அவள் தனது மொத்த வலியையும் எங்கள் மனசிற்கு மாற்றிக் கொடுத்து விட்டு  மறைந்து விட்டாள்.     புத்தன் சொன்னது போல மரணமில்லாத வீடு இவ்வுலகில் இல்லை.   எனக்கு நான் எழுதிய தையல்காரன் பதிவுதான் நினைவிற்கு வந்தது.   இதுவரை அதனை வாசிக்காதவர்கள்  வாசிக்கவும்.


மேற்படி காரணங்களால் என்னால் பதிவுலகுடன் தொடர்பில் இருக்க இயலவில்லை. நண்பர்கள்   தவறாக எண்ண  வேண்டாம். முக்கியமாக  வை.கோ  சார் என்னை மன்னிக்க வேண்டும்.  அவரது மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க இயலவில்லை. விருதுகளுக்கு நன்றி கூற இயலவில்லை.    இப்போது கூட ஒரு குருட்டு அதிர்ஷ்டத்தில் பதிவுப் பக்கம் திறந்து விட்டதோ எனத் தோன்றுகிறது.   இதுவரை மற்றவர் பதிவுக்கு கருத்து கூற இயலாத நிலையும் எனது சிஸ்டத்தில் இருந்தது என்ன காரணமோ ஒன்றும் விளங்கவில்லை  யாராவது ஆலோசனை சொன்னால்  நன்றாயிருக்கும்.    இனி மாதம் ஒரு பதிவாவது வெளியிட விரும்புகிறேன். முயற்சிக்கிறேன்.


  என்றென்றும் அன்புடன் உங்கள் தோழி வித்யா சுப்ரமணியம்.     

14 comments:

ஹுஸைனம்மா said...

வாங்க மேடம். சோகங்கள் தந்த வருத்தங்கள் மாறிவிட என் பிரார்த்தனைகள். அடிக்கடி வாங்க.

raji said...

பல சுமைகளுக்கு நடுவே பதிவின் பக்கமும் வருகை தந்தது மகிழ்ச்சி.இந்த வருகை உங்கள் சோகத்தையும் குறைக்கட்டும்.

வரன் சம்பந்தமா சீக்கிரம் பதிவு எதிர்பார்க்கிறோம்.அப்படியே உங்கள் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும் முடியும் போது ஒன்ரிரண்டேனும் போடலாமே.

இராஜராஜேஸ்வரி said...

புத்தன் சொன்னது போல மரணமில்லாத வீடு இவ்வுலகில் இல்லை. //

சோகத்திலிருந்து மீண்டு வர பிரார்த்தனைகள்..

Asiya Omar said...

வலைப்பூவில் பலரைச் சந்திக்கும் பொழுது,பகிரும் பொழுது மனசு லேசாகும்.நேரம் கிடைக்கும் பொழுது பதிவிடுங்க.

middleclassmadhavi said...

Welcome back, madam.

So sad about your sister....

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாருங்கள் மேடம், தங்களை நீண்ட நாட்களுக்குப்பின் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

இருப்பினும் அலுவலக்த்தில் ஏற்பட்ட தீவிபத்து + அதனால் ஏற்பட்ட கூடுதல் பணிச்சுமை + தன்னார்வ ஓய்வு பெற்று வெளியே வரமுடியாத நிலை + உடன்பிறப்பு ஒருவரின் திடீர் மறணம் என அடுத்தடுத்து பல்வேறு சோதனைகளைக் கேட்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களுக்கும் என் அன்பான புத்தாண்டு + பொங்கல் நல்வாழ்த்துகள்.

>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இரண்டாவது, என் சின்னப் பெண்ணுக்கு வரன் தேடும் படலம்.//

இது கேட்க மிகவும் சந்தோஷமான செய்தியாக உள்ளது.


(இதன் மூலம் கிடைத்த சுவையான அனுபவங்கள் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு இருக்கிறது)

இதிலும் ஏதோ சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தியுள்ளீர்களே !

>>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//முக்கியமாக வை.கோ சார் என்னை மன்னிக்க வேண்டும். அவரது மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க இயலவில்லை. விருதுகளுக்கு நன்றி கூற இயலவில்லை.//

தாங்கள் கூறியுள்ளது போலவே தான் பலருக்கும் பலவித சுகங்களும் சோகங்களும் மாறிமாறி வந்து கொண்டே இருக்கின்றன.

நானும் இப்போதெல்லாம் அதிகமாக பதிவுகள் தருவதில்லை. எப்போதாவது மாதம் ஒன்று வீதம் மட்டுமே.

இதற்கெல்லாம் மன்னிப்பு என்ற பெயர் வார்த்தைகள் வேண்டாமே, மேடம்.

>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இதுவரை மற்றவர் பதிவுக்கு கருத்து கூற இயலாத நிலையும் எனது சிஸ்டத்தில் இருந்தது என்ன காரணமோ ஒன்றும் விளங்கவில்லை யாராவது ஆலோசனை சொன்னால் நன்றாயிருக்கும்.//

நம் அன்பு மகள் “கற்றலும் கேட்டலும்” திருமதி ராஜி மேடம் இருக்கும் போது என்ன கவலை?

முடிந்தால் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கோ. உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். இது என் அனுபவம்.

[உங்களுக்கே தெரிந்திருக்கும், அவர்களே முன்வந்து இந்நேரம் உங்கள் கணினி பிரச்சனைகளைத் தீர்த்திருப்பார்கள், என நம்புகிறேன்]

//இனி மாதம் ஒரு பதிவாவது வெளியிட விரும்புகிறேன். முயற்சிக்கிறேன்.//

மிகவும் சந்தோஷமான செய்தி இது.

பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன்
VGK

கே. பி. ஜனா... said...

ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பதிவு... மகிழ்ச்சி! நடக்கவிருக்கும் தங்கள் சின்ன மக்கள் திருமணத்துக்கு வாழ்த்துக்கள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எல்லாத் துயரங்களிலிருந்து மீண்டு(ம்) உயிர்த்து .....சிலிர்த்தெழ வேண்டும் ...

ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல.....வாழ்த்துக்களுடன் .......

ஆர்.ஆர்.ஆர்.

ஞாபகம் வருதே... said...

மீள் வருகைக்கு நன்றி.
தமக்கையின் மறாவுக்கு ஆழ்ந்த இரங்கல்.
வரன்,கலியாணம்,கதை...எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.
வலியை மாற்றிக் கொடுத்துவிட்டுச் சென்ற வார்த்தை ஜாலம் கவிதை.(பி.கு) பணிப்பதிவேடுகளை ஸ்கேண் செய்து ஆவணப்படுத்தும் பணிகள் அரசு அலுவலகங்களில் இனியாவது நடைபெற வேண்டும்.)

Unknown said...

நான் இன்றுதான் முதன் முதலாக உங்கள் பக்கத்திற்கு வருகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என் அவா.

மடிப்பாக்கம் ரவி.