Sunday, January 2, 2011

சதாசிவக் கோனே (பயணம்)

சென்ற ஆண்டு சதாசிவ கோனே ஏறி விட்டு வந்தோம் ஆந்திராவில் புத்தூர் வழியாகச் சென்று நாகலாபுரத்தில் இரவு தங்கிவிட்டு மறு நாள் காலை சதாசிவ கோனே சென்றது அற்புதமான அனுபவம். அழகிய இயற்கை எழில் கொஞ்சிய மலையின் மீது நாங்கள் சென்று வந்ததை புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு முறை சென்று வாருங்கள். மலை மீது இரண்டு அருவிகள் உள்ளது. மலை மீதிருந்து இறங்கும்போது குறுக்கு வழி ஒன்றில் இறங்கினோம். அது மிகுந்த சாகசத்திற்குரியதாய் இருந்தது. மலை மீது சிவலிங்கத்திற்கு நாங்களே அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்தோம்




சாகசப் பயணம்
வழுக்குப் பாறைகள்
காட்டு வழியில்




விபூதி அபிஷேகத்தில் சிவன்

அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழி



அம்மன் சந்நிதி
அம்மன் சந்நிதிக்கருகில் ஒரு அருவி
.

23 comments:

மாணவன் said...

ஆன்மீகப் பயண பகிர்வுக்கு மிக்க நன்றிங்க மேடம்...

உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.......

raji said...

பகிர்வுக்கும் புகைப்படங்களுக்கும் நன்றி

R. Gopi said...

படங்கள் சூப்பர்.

மலை மேலே போய் வர எவ்வளவு நேரம் பிடிக்கும்? வேறு ஏதேனும் மேலதிகத் தகவல் இருந்தால் கொடுங்களேன்:)

நன்றி

PARTHASARATHY RANGARAJ said...

thanks for sharing

'பரிவை' சே.குமார் said...

படங்கள் அருமை... அருமையான இடத்தின் அறிமுகம்.

ஸ்ரீராம். said...

அழகிய படங்கள். படங்களில் இயற்கையின் அழகைப் பார்க்கும்போது பார்க்கும் ஆவல் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி மாணவன், ராஜி, கோபி, பார்த்தசாரதி, சே.குமார், ஸ்ரீராம்.
இனத்திடம் புத்தூரிளிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. வேகமாய் ஏறினால் மிஞ்சிப் போனால் மூன்று மணிநேரம். ஜீப செல்வதற்கும் பாதை உள்ளது. புத்தூரை சுற்றிலும் நிறைய கோயில்கள் உள்ளன. சுருட்டப் பள்ளி சிவன், குடிமல்லம் சிவன்(இவரைப் பற்றி தனி பதிவே போடலாம்) வெங்கடாசலபதி கோயில் என்று நிறைய ஸ்தலங்கள் உள்ளது.

சி.பி.செந்தில்குமார் said...

good post madam.but yr blod opening is slow.

சி.பி.செந்தில்குமார் said...

pls attach 5 fotos only in one post.

Vijiskitchencreations said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆண்மிக பயணம்+படங்கள் அருமை.

www.vijisvegkitchen.blogspot.com

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

இயற்கை சூழல், நிழல் படங்களாக மனசை அள்ளுகின்றன...செல்ல வேண்டும்...

Chitra said...

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தரும் பயணம். அருமையான புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
புத்தாண்டு மற்றும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்!

தக்குடு said...

போட்டோ எல்லாம் பாத்தாலே அங்க போகனும் போல ஆசையா இருக்கு!..:)

R. Gopi said...

நான் நாளை சென்னை வருகிறேன். உங்கள் புத்தகங்களை வாங்கவேண்டும். உங்கள் மின்னஞ்சல் அல்லது கைபேசி என்னை gopica@gmail.com என்ற என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

பயணப்பகிர்வு அருமை!
சென்ற பதிவில், உங்களைக் கவர்ந்த பதிவுகளில் என்னையும் குறிப்பிட்டு எழுதியதற்கு மனம் நிறைந்த அன்பு நன்றி!

அப்பாதுரை said...

உங்கள் email அனுப்ப முடியுமா? கயிலாயப் பயணம் பற்றிக் கொஞ்சம் ஆலோசனை பெற விரும்புகிறேன். நன்றி.
(msuzhi@ymail.com)

RVS said...

விபூதி அபிஷேகத்தில் சிவன் படம் கண்டு பரவசமடைந்தேன்..

பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேடம்.!!! ;-)

raji said...

விரைவில் பாட்டியாகப் போவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இறைவனின்
பரிபூரண அருள் கிடைக்க எல்லாம் வல்ல
இறைவனை ப்ரார்த்திக்கிறேன்

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள‌ வித்யா!

நான் அடுத்த‌ வார‌ம் சென்னை வ‌ருகிறேன். உங்களை சந்திக்க‌ வ‌ர‌லாமென்று நினைப்பு. என் ஈமெயில் அட்ர‌ஸ் smano26@gmail.com

இத‌ற்கு உங்கள் வசதியைக் குறித்து ப‌திலெழுத‌வும்.

raji said...

congrats paatimma

Karthikeyan said...

மிக்க நன்றி. உங்களின் சதாசிவ கோனே படங்கள் அருமை. மலை மேல் சிவனை தேடி அலைபவன் நான். நீங்கள் தந்த தகவல் ஒரு தூண்டுகோலாக உள்ளது. பார்க்கலாம் எப்பொழுது அழைக்கிறான் என்று!

holistic said...

Dear Friend,

I came across this link in the net and this is a photo collection on sadasiva kona. There is a photo of one avadhuta swami too in the collection. The link is as follows:
http://picasaweb.google.com/jothisundaram/SadhaShivaKona#
Do enjoy the scenic beauty

துளசி கோபால் said...

படங்கள் அருமை.

பயணம் நல்லது.