அலுவலகம், அது விட்டால், பேரக குழந்தைகள் என்று எனது ஒவ்வவொரு நாளும் ஓடுவதால், பதிவுப் பக்கமே வர முடியவில்லை. பின்னூட்டமிடுவது கூடக் குறைந்து விட்டது. நணபர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஒரு நல்ல காரியதிற்குதான் இந்தப் பதிவு எழுதுகிறேன்.
கோட்டூர்புரத்தில் கணேஷ் என்கிற ஆறு வயது சிறுவன். மாநகராட்சியின் அலட்சியத்தால் திறந்து கிடந்த வடிகால் தொட்டியில் விழுந்து மருத்துவர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்தான். உயிர் ம்ட்டும்த்ன். ஓடி ஆடி விளையாடி சிரித்துக் கொண்டிருந்த குழந்தை கடந்த எட்டு மாதமாக வெறும் ஜடமாய் எவ்வித இயக்கமுமின்றி இருக்கிறது. இந்தத் தகவல் தெரிந்ததும் எனது மருமகன் (Sanjay Pinto) தானே நேரில் சென்று அந்தக் குழந்தையைப் பற்றி ஒரு சிறப்பு கவரேஜ் செய்தி தயாரித்து NDTV HINDU வில் அது தொடர்ந்து ஒளிபரப் பாயிற்று. அந்தச் சிறுவனின் ஒருநாள் மருத்துவச் செலவே சில ஆயிரங்கள். அவனுக்கு பசி என்று கூட சொல்லத்தெரியாது. ஏழை பெற்றோர்கள் செய்வ்தறியாது கலங்கிப் போயிருக்கிறார்கள்.
NDTV HINDU அந்தச் சிறுவனின் மறுவாழ்வுக்காக முயன்று வருகிறது. இதுவரை பலர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். கீழ்க் கண்ட சுட்டியில் அந்த சிறுவனின் பரிதாப நிலையைக் காணலாம். (ஆரம்பத்திலிருந்து பார்க்கவும்.) எனது பதிவுலக நண்பர்களும் அந்தச் சிறு வனுக்காக தங்களால் இயன்ற அளவில் உதவிட முன்வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. கருணைக் கரம நீட்டுங்கள்.
நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு துளியும் அங்கே பெரு வெள்ளமாகி உதவும். NDTV HINDU வுடன் கை கோர்த்தும் இதைச் செய்யலாம். அல்லது நேரடியாகவும் உதவலாம். விலாசம் மற்றும் தொடர்பு நம்பர் கீழே.
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருப்பின் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். நம் கவனக் குறைவு கூட குழந்தைகள் ஆபத்து நோக்கி செல்வதற்குக் காரணமாகி விடுகிறது.
18 comments:
அந்தக் குழந்தையின் முகம் மனசைப் பிசைகிறது. தங்களைப் போன்ற நல் உள்ளங்களின் முயற்சியும் எங்களைப் போன்றோரின் பிரார்த்தனைகளும் அப்பெற்றோர்க்கு துயர் கடக்கும் வலிவைத் தரட்டும்! முகவரி ஏதேனும் தந்திருக்கலாமே... உதவ நினைப்பவர்களுக்கு உதவியாய்.
உதவிக்கரம் பல இடங்களில் இருந்து நீளும் இந்த பதிவை பலர் பலருக்கு பரிந்துரை செய்தால்
Feeding hungry is serving God.Hope many will come forward to hel.Thanks for posting this voice of Concern Ma'am
இந்த பதிவிற்கு கட்டாயம் பலன் இருக்கும் மேடம்
அந்தக் குழந்தையைப் பார்த்தாலே மிகவும் மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
ஓடியாட வேண்டிய வயதில் எதிர்பாராமல் இப்படி ஒரு கஷ்டம் அந்தக்குழந்தைக்கு வந்துள்ளதே!
நிச்சயமாக ஏதாவது ஒரு வழியில் அந்த பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிகள் செய்ய முயற்சிப்போம்.
தங்களின் இந்த நியாயமான வேண்டுகோளுக்கு நல்ல பலன்கள் ஏற்படும், மேடம்.
//உங்கள் வீட்டில் குழந்தைகள் இருப்பின் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். நம் கவனக் குறைவு கூட குழந்தைகள் ஆபத்து நோக்கி செல்வதற்குக் காரணமாகி விடுகிறது. //
மிகச்சரியாகவே, எச்சரிக்கை போலச் சொல்லி உள்ளீர்கள். ஆம். உண்மை தான். எந்த நிமிடம் எந்த ரூபத்தில், என்ன ஆபத்து வரக்கூடும் என்று சொல்ல முடியாத நிலைமைகளே எங்கும் நிறைந்துள்ளது. சிழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்தப் பகிர்வுக்கு நன்றி.
-o-o-o-o-o-o-o-o-
By-the-by
தேவி தீபாவளி மலரில் தங்களின் சிறப்பு படைப்பு வெளியிடப்போவதாக சமீபத்திய தேவி இதழின் முதல் பக்கத்தில் "பிரபலங்களின் புதிய படைப்புகள் - தீபாவளி ஸ்பெஷல்” என்று விளம்பரப் படுத்தி இருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன்.
தனியே ஒரு மெயில் மூலம் வாழ்த்துச் சொல்ல நினைத்திருந்தேன். ஏனோ நேரமின்மையினால் விட்டுப்போய் விட்டது.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள், மேடம்.
suryajeeva said...
உதவிக்கரம் பல இடங்களில் இருந்து நீளும் இந்த பதிவை பலர் பலருக்கு பரிந்துரை செய்தால்
இந்த பதிவின் லிங்கை எனது தளத்திலும் இணைக்கிறேன்... பகிர்வுக்கு நன்றி சகோ!
இந்த பதிவிற்கு கட்டாயம் பலன் இருக்கும்.
செய்திச் சேனலில் பார்த்தேன். உதவியவர்கள் பட்டியலில் உங்கள் பெயரையும் பார்த்தேன். மனதைப் பிசைந்த செய்தி. எங்கள் உறவினர் வீட்டில் ஏறத்தாழ இதே போல ஆனால் வேறு ஒரு நோயினால் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன் நினைவுக்கு வந்தான். அவனுக்குப் பிறவியிலிருந்தே ஒரு நோய்.
பயனுள்ள பதிவு மேடம், நன்றிகள்.
என் டி டி வியில் நான் அந்த நிகழ்ச்சி பார்த்தேன்.
மாதம் மருத்துவச் செலவு மிக அதிக தொகை செலவு ஆகிறது.
நம்மால் முயன்ற அளவு உதவி கிடைக்க உழைப்போம்
இந்தப் பதிவை சமூக தளங்களில் பகிர்ந்து கொள்கிறேன். வங்கிக் கணக்கு விபரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்!
நான் ஒரு இயன்முறை மருத்துவர், அந்த சிறுவனை நிச்சியம் குணப்படுத்த முடியும், அவனக்கு தேவையான பிசியோதெரபி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சுமார் இரண்டு மணி நேரம் அளிக்க வேண்டும், இதற்கு சில மறுவாழ்வு மையங்கள் சென்னையில் உள்ளன. spastic society of india, என்ற ஒரு அமைப்பு உள்ளது அவர்கள் மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
உங்களுக்கு நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நன்றி. அந்தப் பையனைப் போய் பார்த்தேன். சென்னையில் உள்ள நண்பர்கள் சென்று அந்தப் பையனை பார்த்தாலே நிலைமை புரிந்து கொள்ள முடியும். ரயில்வேயின் அலட்சியம் தான் காரணம். எல்லாம் வல்ல இறைவனிடம் நல்ல உள்ளங்களின் பிரார்த்தனை நல்லது. முடிந்த அளவு உதவினாலே நல்லது தான். அந்தப் பெற்றோர்களை நேரில் சந்தித்து பேசினாலே இன்னும் நல்லது. நன்றி. வாழ்க பாரதம். வெல்க பாரத சமுதாயம்.
இந்தப் பதிவுக்கு கருணையுடன் பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. இதுவரை வராதவர்கள் எல்லாம் வந்து அந்தக் குழந்தைக்காக உருகியிருப்பதற்கு நன்றி. உங்கள் பிரார்த்தனைகளும் ஒரு பலம்தான்.
அந்தக் குழந்தையின் முகம் மனதைப்பிசைகிறது வித்யா! ஏதுமறியாமல் துள்ளி விளையாட வேண்டிய வயதில் அந்தக் குழந்தைக்கு எத்தனை பெரிய சோகம்! அதன் பெற்றோருக்கு தினம் தினம் எந்த அளவு வலி இருந்து கொண்டிருக்கும்! நினைத்துப்பார்க்கவே அயர்வாக இருக்கிறது.
நவம்பரில் இரண்டாம் வாரத்தில் சென்னை வருவோம். அப்போது இந்தக் குழந்தையின் பெற்றோரைப்பார்த்து பண உதவி செய்யலாமென்று தீர்மானித்திருக்கிறோம் நானும் என் கணவரும். சென்னை வந்ததும் உங்களுக்கு ஃபோன் செய்கிறேன். உங்கள் மெயிலுக்கும் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளேன்.
ஒரு நல்ல முயற்சி இது!
தாங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளதால்
வலைச்சரம் இன்று [12.11.2011] ஜொலிக்கிறது.வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். அன்புடன் vgk
Post a Comment