Tuesday, October 18, 2011

கருணைக் கரம் நீட்டுங்கள்

அலுவலகம், அது விட்டால், பேரக குழந்தைகள் என்று எனது ஒவ்வவொரு நாளும் ஓடுவதால், பதிவுப் பக்கமே வர முடியவில்லை. பின்னூட்டமிடுவது கூடக் குறைந்து விட்டது. நணபர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். ஒரு நல்ல காரியதிற்குதான் இந்தப் பதிவு எழுதுகிறேன்.


கோட்டூர்புரத்தில் கணேஷ் என்கிற ஆறு வயது சிறுவன். மாநகராட்சியின் அலட்சியத்தால் திறந்து கிடந்த வடிகால் தொட்டியில் விழுந்து மருத்துவர்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்தான். உயிர் ம்ட்டும்த்ன். ஓடி ஆடி விளையாடி சிரித்துக் கொண்டிருந்த குழந்தை கடந்த எட்டு மாதமாக வெறும் ஜடமாய் எவ்வித இயக்கமுமின்றி இருக்கிறது. இந்தத் தகவல் தெரிந்ததும் எனது மருமகன் (Sanjay Pinto) தானே நேரில் சென்று அந்தக் குழந்தையைப் பற்றி ஒரு சிறப்பு கவரேஜ் செய்தி தயாரித்து NDTV HINDU வில் அது தொடர்ந்து ஒளிபரப் பாயிற்று. அந்தச் சிறுவனின் ஒருநாள் மருத்துவச் செலவே சில ஆயிரங்கள். அவனுக்கு பசி என்று கூட சொல்லத்தெரியாது. ஏழை பெற்றோர்கள் செய்வ்தறியாது கலங்கிப் போயிருக்கிறார்கள்.


NDTV HINDU அந்தச் சிறுவனின் மறுவாழ்வுக்காக முயன்று வருகிறது. இதுவரை பலர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். கீழ்க் கண்ட சுட்டியில் அந்த சிறுவனின் பரிதாப நிலையைக் காணலாம். (ஆரம்பத்திலிருந்து பார்க்கவும்.) எனது பதிவுலக நண்பர்களும் அந்தச் சிறு வனுக்காக தங்களால் இயன்ற அளவில் உதவிட முன்வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு. கருணைக் கரம நீட்டுங்கள்.
நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு துளியும் அங்கே பெரு வெள்ளமாகி உதவும். NDTV HINDU வுடன் கை கோர்த்தும் இதைச் செய்யலாம். அல்லது நேரடியாகவும் உதவலாம். விலாசம் மற்றும் தொடர்பு நம்பர் கீழே.



உங்கள் வீட்டில் குழந்தைகள் இருப்பின் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். நம் கவனக் குறைவு கூட குழந்தைகள் ஆபத்து நோக்கி செல்வதற்குக் காரணமாகி விடுகிறது.