Wednesday, July 27, 2011

மக்கள் தொலைக் காட்சியில் நான்


ஜூலை 18 ஆம் தேதி மக்கள் தொலைகாட்சி காலை வணக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான எனது பேட்டியின்
இணைப்பை கீழே அளித்துள்ளேன். உங்கள் பொன்னான நேரத்தில் சிறிதை இதற்கும் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். தொலைகாட்சி பேட்டிகள் குறித்த எனது அனுபவங்களை பதிவாக பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.



35 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

வணக்கம். தங்கள் பேட்டியை வெகு சுவாரஸ்யமாக இருமுறை போட்டுக் கேட்டேன். மிகவும் சிறப்பாக இருந்தது.
தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களை நான் ப்ளாக்கில் உள்ள புகைப்படத்தில் பார்த்ததற்கும், இந்தப் பேட்டியில் பார்த்ததற்கும் நிறைய உருவ வித்யாசங்களை உணர முடிந்தது. தாங்கள் தானா என்று சந்தேகமே வந்து விட்டது.
தொடரும்.......

வை.கோபாலகிருஷ்ணன் said...

பேட்டி எடுக்கும் சூழல் இயற்கையாக அமைய வேண்டும் என்பதால் தங்களை நிற்க வைத்தே பேட்டி எடுத்திருப்பது என்னவோ போல எனக்குத் தோன்றியது.பாதி பேட்டி அப்படியே நேசரலாக ரோட்டிலும் மீதி ஒரு வீட்டுத்திண்ணையிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்தில் அமர வைத்தோ எடுத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

மற்றபடி அம்புலிமாமாவில் ஆரம்பித்து பேட்டி நன்றாகவே கொடுத்திருந்தீர்கள்.

ஒரு பதிலை முழுவதுமாக நாம் சொல்வதற்குள், வழக்கம் போல அடுத்த கேள்விக்கு தாவி விடுவதே பேட்டி எடுப்பவர்களின் வழக்கம். அதுவும் இதில் நன்றாகத் தெரிந்தது. குறைவான நேரத்திற்குள், நிறைய தகவல்களுடன் பேட்டியை முடிக்கணும் என்பதே அவர்களின் குறிக்கோள்.

தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெண்ணுரிமை என்று தெரியாமலேயே, அது போன்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமலேயே, எல்லா உரிமைகளையும் எடுத்துக்கொண்டு, மிகச்சிறப்பாக நிர்வாகம் செய்து வந்த குடும்பப்பெண்களைப்பற்றி கூறியிருந்தீர்கள். அது மிகவும் உண்மையே. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுவும் அவர்கள் அதிகம் படிக்காமலேயே, கணக்கு வழக்குகளிலும், உலக அனுபவத்திலும் மிகச்சிறப்பாக வாழ்ந்து காட்டியுள்ளனர்.

இன்றும் என் பெரிய அக்கா வயது 72.
நாலாம் வகுப்பு மட்டும் படித்தவள். அபார சம்சாரி. 6 பிள்ளைகள் 2 பெண்கள். 6 நாட்டுப்பெண்கள், 2 மாப்பிள்ளைகள், பல பேரன் பேத்திகள். 8 சம்பந்திகள். அத்தனை பேரையும் அன்போடு அரவணைத்து, அனைத்து வரவு செலவுகளையும் குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு,, தக்க ஆலோசனைகளையும் வழங்கி, எதிலும் ஆர்வத்துடன், மிக நாகரீகமாக உள்ளனர். சமீபத்துல் 2 முறை (எப்போதுமே மடிசார் புடவை தான்) சிங்கப்பூரில் வாழும் தன் கடைசிபெண்ணுக்கு பிரசவ நேரத்தில் உதவி செய்யப்போய் வந்துள்ளார்கள்.

நாங்கள் யாருமே அவளைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க மாடடோம். மகா கெட்டிக்காரி. எல்லாவற்றிற்கும் அவளின் நல்ல மனசும் பெருந்தன்மையுமே தான் காரணம்.



தொடரும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

புகைபிடித்தலால் ஏற்படும் சிரமங்களை தங்கள் கணவரின் வாழ்க்கை மூலம் அனுபவத்துச் சொன்னீர்கள். அவர் எவ்வளவு நல்லவர் என்றும் உங்கள் எழுத்துக்கள் மங்கையர் மலரில் வந்ததும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் செயல்பட்டார் என்பதையும் வெகு அழகாகச் சொன்னீர்கள். அவரின் பிரிவு பற்றிச்சொன்னபோது, எனக்கு மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது.

தங்களின் கைலாஷ், பர்வதமலை, சதுரகிரி போன்ற மலைப்பயணங்கள், அதனால் ஏற்படும் த்ரில்லிங் அனுபவங்கள், மனதிற்கு ஏற்படும் அமைதியான சூழல், பக்திப்பரவசம், அங்கு எதிர்படும் மக்களின் வாழ்வியல் சுக சோகங்கள், பிரச்சனைகளை கண்டுகொள்ள முடியும் சந்தர்ப்பம் என எல்லாவற்றையும் வெகு அழகாக, கோர்வையாகச் சொல்லி விட்டீர்கள்.

முன்கூட்டியே இதுபற்றி எங்களுக்கு ஒரு பதிவின் மூலம் தெரிவித்திருந்தால், நாங்களும் டி.வி.யிலேயே பேட்டியைக் கண்டு களித்திருப்போம். பரவாயில்லை இந்த வீடியோ காட்சி ஐடியாவும் அருமை தான்.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

தங்களின் இந்த பேட்டி பற்றிய அனுபவங்களும், விட்டுப்போன விஷயங்களும், அடுத்த பதிவில் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

அன்புடன் தங்கள் vgk

மதுரை சரவணன் said...

vaalththukkal

மாய உலகம் said...

பொருப்பு என்ற வந்தவுடன் பெண்கள் தங்கள் திறமையை லாவகமாக கையாளும் விதமாக இருக்கிறார்க்ள்.. என்பதை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.. கணவர் பிரிவு-சோகம்(வலி).. பயணம் பருவதமலை,etc., கல்லூரி படிக்கும் போதே எனது நண்பர்கள் பருவதமலை சென்று வந்த அனுபவத்தை சொன்னதும் எனக்கும் போகவேண்டும் என்ற ஆவல் தூண்டியது... அதை உங்கள் பயணங்களின் பகிர்வால் ஞாபகபடுத்தியுள்ளீர்கள்... தங்களது பேட்டி சுவாராஸ்யம்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி வைகோ சார். என் அப்பாவும் அப்படித்தான். தன் அக்காவை கேட்டுதான் முடிவெடுப்பார். ராஜ ராஜ சோழனின் தமக்கை குந்தவையின் அறிவும் ஞானமும் அனைவரும் அறிந்ததே.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பாபரி மதுரை சரவணன். நன்றி மாய உலகம்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

வைகோ சார், இப்போது நின்றபடியும் நடந்தபடியும் பெட்டி எடுப்பதுதான் வழக்கமாக இருக்கிறது.

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப மனநிறைவா இருந்தது உங்க பேட்டி.. எழுத்துகள், பிடிச்ச எழுத்தாளர்,பயணங்கள்,சொந்தக்கதைன்னு எல்லாத்தையும் எங்களோட பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி.

Avargal Unmaigal said...

ஒரு தரமான எழுத்தாளரின் பேட்டியை பார்த்ததில் மிக சந்தோசம். நான் 1997 க்கு முன்னாள் வந்த எல்லா கதை சிறுகதைகள் படித்து இருக்கிறேன், உங்கள் கதைகளையும் படிதிருப்பேன் என நினைக்கிறேன் ஆனால் நினைவில் இல்லை.அதன் பிறகு யூ எஸ் வந்த பிறகு அந்த வாய்ப்பை இழந்து இப்போது இணையம் மூலம் மீண்டும் படிக்க பார்க்க வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன,

வாழ்க வளமுடன்,

ஸாதிகா said...
This comment has been removed by the author.
'பரிவை' சே.குமார் said...

Vazhththukkal...

கடம்பவன குயில் said...

உங்கள் பேட்டியிலிருந்து நீங்கள் கடந்து வந்த பாதையும் தாங்கள் மனஉறுதியுடன் சமாளித்த நிகழ்வுகளும் என்னை பிரமிக்க வைக்கிறது. தங்களின் புரோபைல் படத்திற்கும் வீடியோ இமேஜூக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நான் மிகவும் விரும்பி படித்த புத்தகங்களில் உங்களது கதைகளும் அதிகம். பேட்டி மிகவும் அருமையாக சென்றது.

ஸாதிகா said...

சகோதரி,உங்கள் பேட்டியை மக்கள் டிவியில் கண்டு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.பேட்டியை பார்த்து விட்டு உடனடியாக உங்கள் வலைப்பூவினுள் நுழைந்து கண்ணாமூச்சி பகுதி , 1,2 படித்ததில் மனம் கனத்துப்போனது.ஈடு செய்ய முடியாத இழப்பிலும் சுதாரித்து நீங்கள் எழுந்து நின்ற விதம் வருத்தத்திலும் அமையப்பெற்ற மகிழ்ச்சி சகோதரி.

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் மேடம். உங்க பேட்டியை பார்த்தேன். மிகவும் நன்றாக உள்ளது. பெண்ணியவாதம் பற்றிய கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் அருமை,நிறைய தகவல்கல் தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி.

R. Gopi said...

சூப்பர்

அப்பாதுரை said...

சுவையான பேட்டி. மக்கள் டிவி என்றால் கேபிள் சேனலா? இப்படி நிற்க வைத்தும் நடக்க வைத்தும் பேட்டி எடுக்கிறார்களே? (வித்தியாசம் என்றாலும் ஒலிப்பதிவில் குறை வருகிறது).

வீட்டை விட்டு ஓடி மணமுடித்த பெண்கள் கதையை நீங்கள் விவரித்திருக்கும் விதம் அருமை. மாமனாரும் கொடுமைக்காரன் தான் என்பதும் சரியான பார்வை.

அமைதி பற்றிய உங்கள் கருத்து - உங்கள் புன்னகையிலேயே தெரிகிறது - அமைதியை உள்ளே அடக்கி வைத்தவர் என்று.

தென்னங்காற்று படிக்கப் போகிறேன்.

rajamelaiyur said...

நல்ல பேட்டி

rajamelaiyur said...

என்று என் வலையில்

ராஜ் மெட்ரிக் ஸ்டுடண்ட் பவுண்டேஷன் – ஒரு புதிய புரட்சி

நிகழ்காலத்தில்... said...

மகிழ்ச்சி சகோ.

திருக்கைலாய பயணம் சென்ற தங்களின் பதிவுகள் படித்தேன்.

எனது திருக்கைலாய பயணத்திற்கு ஊக்கத்தை தந்தது என்றால் அது மிகையல்ல.,

வாழ்த்துகள்

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்


நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..


நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்


http://maayaulagam-4u.blogspot.com

மனோ சாமிநாதன் said...

பேட்டி ரொம்பவும் நன்றாக இருந்தது வித்யா! எல்லா விஷயங்களிலும் வெளிப்படையான பேச்சில் உங்கள் கருத்துக்களை 'பளிச்' சென்று சொல்லியிருக்கிறீர்கள்! இறுதியில் ' மன‌சு தான் எல்லாவற்றுக்கும் காரணம்' என்று அழகாகச் சொல்லி முடித்திருக்கிறீர்கள். இனிய வாழ்த்துக்கள் வித்யா!

மனோ சாமிநாதன் said...

மனசு மிகவும் கனமாகிப்போனது உங்களின் 'கண்ணாமூச்சி'யைப் படித்து! நீங்கள் தவித்த தவிப்பை ஒரு பெண்ணாக முழுமையாக உணர முடிகிறது! சிகிரெட்டின் பாதிப்புக்களை இதை விட வேறு யாராலும் இப்படி நெஞ்சில் அறைகிற மாதிரி சொல்ல முடியாது. இதைப்படித்து, கொஞ்சம் பேராவது சிகிரெட்டை விட்டதாக எழுதினால் போதும், அதுவே உங்களின் மன வேதனைக்கான மருந்தாக அமையும்.

Chitra said...

"கண்ணாமூச்சி" கதை பற்றியும், உங்கள் கணவரின் புகைப்பிடிக்கும் பழக்கமும் - அதனால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும் - நீங்கள் கொண்டு வரும் விழிப்புணர்வை பற்றியும் கேட்கும் போது மனதை தொட்டது, மேடம். நீங்கள் பேசும் போதும் ரொம்ப எதார்த்தமாக நல்லா பேசுறீங்க.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பேட்டி மிக..மிக..அருமை.முழு நிலாவின் உப்பிலி என்னையும் பாதித்தான்..அந்த கால கட்டத்தில் உப்பிலி என்பது ஒரு உண்மையான ஆள் என்பதில் எனக்கு ஒரு அசாத்யமான நம்பிக்கை!
சிகரெட்...என் நண்பன் ஒருவனும் செயின் ஸ்மோக்கர்..இந்த சிகரெட் என்னிடமிருந்து அவனை பிரித்து விடுமோ என்ற கவலையில்..பயத்தில்.. அவனுடன் சண்டை போட்டு பேசாதிருந்தேன்.

ரிடயர்டான பின்பும் வேறு இடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான்...என்னைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறான், இன்னமும்!
ஆம்.. சிகரெட் தான் எங்கள் இருவரையும் பிரித்து விட்டது!

ரிஷபன் said...

கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தேன். பேட்டி முழுமையும் மிக இயல்பாக வந்திருக்கு.
நாம் நேசிக்கிற எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே அறிமுகமான நிலையில், அதற்குப் பின் அவர்களது அன்றாட நிகழ்வுகள் பற்றி ஓரளவாவது அறிய நேரும் போது கூடுதலாய் ஓர் உணர்வு - அதை எப்படி சொல்வதென்று புரியவில்லை - பிரமிப்பா.. பிரியமா.. - வந்து விடுகிறது..
பூர்ணத்திலிருந்து பூர்ணம் என்பது போல.. தன்னம்பிக்கையிலிருந்து கிள்ளித் தருகிறீர்கள்..

ராம்ஜி_யாஹூ said...

very nice, thanks for sharing here

தமிழ் அமுதன் said...

மக்கள் தொலைகாட்சியில் இன்று முதன் முறையாக (மறு ஒளிபரப்பு 9/8/2011) உங்கள் பேட்டியை பார்த்து உங்களது வலைத்தளத்தை தேடி பிடித்தேன்..!மிகவும் பயனுள்ள தளம். புகை பிடித்தல் பற்றி நானும் ஒரு பதிவு எழுதி உள்ளேன் .1 இந்த லின்கில் நேரமிருப்பின் வாசித்து பார்க்கவும்..!


http://pirathipalippu.blogspot.com/2009/12/blog-post_19.html

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி.

Anu said...

வித்யா மேடம் ,
வணக்கம். உங்கள் கதைகள் மிக அருமை. மிகவும் இயல்பான நடையில் ,
யதார்த்தமாக இருக்கின்றது. வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

சமுத்ரா said...

உங்கள் பேட்டியை மக்கள் டிவியில் கண்டு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

’’வித்யா சுப்ரமணியம்’’ - இந்த பெயரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

உங்களின் படைப்பில் நான் வாசித்த முதல் நாவல் “உன்னிடம் மயங்குகிறேன்”.

அந்த நாவல் நடையில் நிஜமாகவே நான் மயங்கித்தான் போனேன்.

உங்களின் பேட்டியைக் கண்டதில் மகிழ்ச்சி.