Wednesday, February 10, 2016

அன்புடனே காதல்

அன்புடனே  காதல்

                                
காலங்காலையில்  அழைப்பு மணி அழுத்தப் பட்டதும் வியப்போடு வந்து கதவைத் திறந்த ராதிகாவின் முகத்தில் வியப்பின் அளவு கூடிற்று. கதவுக்கு வெளியே நின்றிருந்த பெண்ணை விழி விரியப் பார்த்தாள். இருபத்திரண்டு வயதிருக்கக் கூடும். துரு துருவென  ஒரு  ுகம்.  கச்சிதமான  உடல்.  எளிமையான  அழகு.

"உள்ளே  வரலாமா?"  குரல்  இனிமையாயிருந்தது. 

"யாரும்மா?  விற்பனைப்  பெண்ணா?"

"உள்ளே  வந்து  சொல்லலாமா?"

ராதிகா  வியப்பு  மாறாது  அவளுக்கு  வழிவிட்டு  ஒதுங்கினாள்.

"வாவ்  வீடு  ரொம்ப  அழகார்க்கு.  உள்  அலங்காரமெல்லாம்  நீங்கதானா?  சூப்பர் ஆண்ட்டி.  அதுசரி  நீங்க  எப்டி  இவ்ளோ  இளமையா  இருக்கீங்க  இந்த  வயதுலயும்?   அந்த  ரகசியத்தை  எனக்கும்  சொல்லுங்களேன்?"

"நீ யாருன்னு  இன்னும்  சொல்லல"

என்  பேர்  ரம்யா.  எம்.ஏ. கம்யூனிகேஷன் முடிச்சு இப்பத்தான் தனியார்  டிவி  சானல்ல வேலைக்கு சேர்ந்திருக்கேன். இன்னிக்கு  காலைல  சிறப்பு  விருந்தினரா  வந்த உங்க  மகன்  அஸ்வினை  எங்க  சானல்ல இன்டர்வியூ  செய்தது  நான்தான். லைவ்  இண்டர்வியூ.  பார்த்திருப்பீங்களே"

ராதிகாவுக்கு  சட்டென  நினைவுக்கு  வந்தது.  ஆமாம்  அதே  முகம்தான்  என்ன  விஷயமா   இங்க?  அஸ்வின்  வீட்ல  இல்லையே"

"நா  உங்களைப்  பார்க்கத்தான்  வந்தேன்." 

"என்னையா?"

"உங்களையேதான்.  காலேல  இண்டர்வியூல அவர்கிட்ட  கல்யாணம்  எப்போ?  காதல் கல்யாணமான்னு   கேட்டேன்.  அதுக்கு  அவர்   என்  அம்மா  எந்தப்  பெண்ணை  சொல்றாங்களோ  அவதான்  என்  மனைவின்னு  சொன்னார்.  இந்தக்  காலத்துல இப்டியும்  ஒரு  பிள்ளையான்னு  ஆச்சர்யம்  ஏற்பட்டது.  உடனே  உங்களைப் பார்க்கணும்னு தோணிற்று.  அதான்  வந்திருக்கேன்."

"என்ன  சாப்பிடற?

என்  பேட்டி  எப்டியிருந்துச்சுன்னு  சொல்லவேல்லயே"

"உண்மையைச்  சொல்லணும்னா  சுமார்தான்.  என்  பையனைப்  பத்தி  இன்னும்  நிறைய  விஷயங்கள்  வெளிப்படற  அளவுக்கு  கேள்விகள்  இருந்திருக்கலாம்."

அதுக்கென்ன.  இன்னொரு  முறை  ஒரு  நிகழ்ச்சி  பண்ணிட்டா  போச்சு"

"சந்தோஷம்.  வேறென்ன?"

"உங்ககிட்ட  வேறொரு  விஷயமும்  கேட்டுடணும்னுதான்  வந்தேன்"

"என்ன?"

"என்னை  உங்களுக்கு  பிடிச்சிருக்கா"

"புரியலை.  எதுக்கு  கேக்கற?"

"உங்களுக்கு  என்னைப்  பிடிச்சிருந்தா  உங்க  பிள்ளைக்கும்  பிடிக்கும்  இல்லையா?  அதான்"

ராதிகா  திகைப்புடன்  அவளை  உற்றுப்  பார்த்தாள்.  என்ன  தைரியம்  இருந்தால்  இப்படி  நேருக்கு  நேர்  வந்து  கேட்பாள்!

"அதிர்ச்சியா  இருக்கா  ஆண்ட்டி?  என்ன  பொண்ணு  இவன்னு  யோசிக்கறீங்களா?  ஆனா  நா  இப்டித்தான்.  எதையும்  வெளிப்படையா  பளிச்சுன்னு  பேசத்தான்  னக்குப்  பிடிக்கும்.  எனக்கு  உங்க  பிள்ளையைப்  பிடிச்சிருக்கு.  அவருடைய  அழகு  அறிவு,  கொள்கைகள்  எல்லாமே  பிடிச்சிருக்கு.  உங்களுக்கு  என்னைப்  பிடிச்சிருந்தா  என்  காதலை  அவர்கிட்ட  நா  சொல்லிடுவேன்"

ராதிகா  மௌனமாக  அவளைப்   பார்த்தாள்.

"நா  யாருன்னு  தெரியாது.  என்  குடும்பம்  எப்டிப் பட்டதுன்னு  தெரியாது. எதுவுமே  தெரியாம  என்னை  எப்டி  பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியும்?  அப்டித்தானே?  சொல்றேன். எங்கப்பா  எக்ஸ்  மினிஸ்டர். ஏகப்பட்ட  ஊழல். ஊரைக்  கொள்ளையடிச்சு  ஏகப்பட்ட  சொத்து  இருக்கு.  சுவிஸ்  பாங்க்ல  எத்தனை  கோடி  இருக்குன்னு அவருக்கே கணக்கு  தெரியாது. அவரை  அப்பான்னு  சொல்லிக்க  எனக்கு  பிடிக்கல. அப்பா  பெண்  உறவை  ரத்து  பண்ணி  சட்டபூர்வமா அவர்கிட்டேர்ந்து  விடுதலை  வாங்கித்தரும்படி கோர்ட்ல வழக்கு போட்ருக்கேன். மனப்பூர்வமா  அவர்கிட்டேர்ந்து உறவை அறுத்துண்டாச்சு. அம்மா  ஒரு  அப்பிராணி.  புருஷன்தான் எல்லாம்  அவளுக்கு. அதனால  அவளையும்  வேண்டாம்னு  முடிவு  பண்ணி  வெளில வந்துட்டேன்.  

அண்ணன்  ஒருத்தன்  அமெரிக்கால  இருக்கான், கூடிய  சீக்கிரம்  இந்தியா  வந்து அப்பாவோ அரசியல்  வாரிசா  ஆய்டுவான்னு  நினைக்கறேன். நா இப்போ ஒரு அபார்ட்மென்ட்ல  தனியா  இருக்கேன். சுய சம்பாத்தியம். ஓரளவு  சமையல் தெரியும். வேலை முடிஞ்சா  வீடு.  கரஸ்ல  எம்.பி.ஏ  படிக்கறேன். இதுலயே  நேரம்  ஓடிடும். நோ  பார்ட்டி,  நோ  ஊர்  சுற்றல்,  எந்த  கெட்ட  பழக்கமும்  கிடையாது.  எனக்கு  இப்போ  உடனடியா  தேவை   கலப்படமில்லாத  அன்பு  மட்டுமே.  உங்க  பிள்ளையைப்  பேட்டி  எடுக்கற  வரை  காதல்ங்கற  வார்த்தையைப்  பற்றி  எல்லாம்  நா  பெரிசா  யோசிச்சதில்ல.   ஆனா  இப்போ  அது  மட்டும்தான்  உள்ள  இருக்கு.  கண்டதும்  காதலா  சுத்த அபத்தம்னு   சினேகிதிகள் கிட்ட கிண்டலடிச்சிருக்கேன். இப்போ  அது  சரிதான்னு  ஒத்துக்கறேன்.   இனி  என்  சந்தோஷம் உங்க  ஒரு  வார்த்தையில்தான்  இருக்கு."

ராதிகா  அவளையே  பார்த்தாள்.

"ஒரு  வேளை  எனக்கு  உன்னைப்  பிடிக்கலைன்னு  சொன்னா?"

"உங்களுக்கு  எதனால  என்னைப்  பிடிக்கலன்னு  தெரிஞ்சுப்பேன்.  அப்டி  பிடிக்காம  போனதுக்கு காரணமா எங்கிட்ட இருக்கற  குறையை  மாத்திக்க முயற்சி  செய்வேன்,  உங்களுக்கு  பிடிக்கிற  வரை  என்னை  மாத்திக்கிட்டே  இருப்பேன். ஏதோ ஒரு வினாடியில் உங்களுக்கு  நிச்சயம்  என்னைப்  பிடிச்சுடும்"

"அவசியமில்லை.  யாருக்காகவும்  நீ  உன்னை  மாற்றிக்  கொள்ளத்  தேவையில்லை. அஸ்வின்  தன்  திருமணம்  பற்றி  சொன்னதை  மறந்துடு.  அவனுக்கு  கல்யாணம்  செய்துக்கற  ஐடியாவே  கிடையாது.  அதைச்  சொல்லாம  அம்மா  சொல்ற  பெண்ணைப்  பண்ணிப்பேன்னு  கப்ஸா  விட்ருக்கான்."

அவர்  பொய்  சொன்னா  மாதிரி  தெரியல.  அம்மா சொன்னா  அவர்  கேக்க  மாட்டார்னா  சொல்றீங்க?” 

"அம்மான்னு  ஒருத்தி  இருந்தாத்தானே?"

ரம்யா  அதிர்ந்தாள். 

"அப்போ  நீங்க?"

நா  அவனோட  சின்னம்மா.  இதுக்கு  மேல  நீ எதுவும்  தெரிஞ்சுக்க  வேண்டாம். உன்  ஆசையெல்லாம்  கிள்ளிப்  போட்டுட்டு  கிளம்பு.  

சின்னம்மாவானா  என்ன?  அம்மாதானே   நீங்களும்.  நீங்க  சொன்னா  அவர்  கேக்க  மாட்டாரா  என்ன?

"மாட்டான்.  நீ  கிளம்பு"

ரம்யா  ஏமாற்றமும்  யோசனையுமாய்  கிளம்பினாள்

                           **************************

செல்போன்  இசைத்ததும்,  அஸ்வின்  அழைப்பது  யாரென்று   திரையைப்  பார்த்து  விட்டு  எடுத்து  பேசினான். 

"சொல்லுங்க  ரம்யா.  நா  என்ன  செய்யணும்?"

கார்த்தால  லைவா  போன  உங்க  இன்டர்வியூக்கு  நல்ல  ரெஸ்பான்ஸ் மிஸ்டர்  அஸ்வின்.  நிறைய  பாராட்டுக்கள்  வந்துக்கிட்டே  இருக்கு.  ஆனா  அதுல  ஒருத்தர்  சொன்ன  விஷயம்  வியப்பா  இருந்துது.  அதை  உறுதி  செய்துக்கத்தான்  கூப்ட்டேன்."

"என்ன  விஷயம்?"

"உங்கம்மா  உயிரோட   இல்லைன்னு சொன்னார். நிஜமா?  அப்பறம் ஏன்  அம்மா  சொல்லும் பெண்ணைக்  கட்டிப்பேன்னு சொன்னீங்க. எது  பொய்  எது  நிஜம்?

ஒரு  பேட்டில  சில  நேரம்  தர்ம  சங்கடமான  கேள்விகளை  எதிர்கொள்ள  நேரிடும்  போது  வேற  வழியில்லாம  ஒரு பதில்  சொல்ல  வேண்டியுள்ளது.  பெர்சனல்  கேள்விகளை  இனியாவது  உங்கள்  பேட்டிகளில்  தவிர்ப்பதே  நல்லது."  என்னைப்  பொறுத்த  வரை  நா  பொய்  சொல்லலைஆத்மாவுக்கு  அழிவேது?   என்  அம்மாவின்  ஆத்மா  எனக்கான  பெண்ணை  நிச்சயம்  அடையாளம்  காட்டும்னு  நா  நம்பறேன்."

"நானும்  நம்பறேன மிஸ்டர்  அஸ்வின்.   உங்கம்மா  இன்னிக்கு  ராத்திரிக்குள்ள  உங்க  வாழ்க்கைத்  துணை  யாருன்னு  உங்களுக்கு  நிச்சயம்  அடையாளம்  காட்டிடுவாங்க  பாருங்க."

அஸ்வின்  வியப்போடு  செல்போனை  பாக்கெட்டில்  வைத்தான்.  

அப்பாவின்   துரோகம்தான்  அம்மாவின்  உயிரை  டுத்திருந்தது.  இன்னொரு  பெண்ணோடு  அவருக்குத்  தொடர்பிருப்பதை  பலவிதத்திலும்  அவர்  நியாயப்படுத்தியும்  கூட,  அம்மாவால்  அந்த  அதிர்ச்சியிலிருந்து  மீள  முடியவில்லை.  மனம்  நோயுற,  உடலும்  நோயுற்றது.  அவளை  கவனித்துக்  கொள்ள  சின்னம்மாவை  வீட்டுக்கே  அழைத்து  வந்தார்.  அவள்  நன்றாகத்தான்  அம்மாவை  கவனித்துக்  கொண்டாள்.  அம்மா  முகம்  திருப்பிக்  கொண்ட  போதும்  அவள்  முகம்  சுளிக்காது  அவளுக்கு  பெட்பேன்  வைத்து  எடுத்து  சுத்தம்  செய்யும்  பணியைக்  கூட  பொறுமையாக  செய்தாள். 

"சாரி  நா  உங்களுக்கு   பெரிய  துரோகம்  செய்து  விட்டேன்.  தப்புதான். எனக்கு  இங்கே  எந்த  உரிமையும்  வேண்டாம்.   உங்க  உடம்பு  குணமானதும்  நா  இங்கேர்ந்து போயிடறேன். என்னை  நம்புங்க.  நீங்க ஒத்துழைப்பு  கொடுத்தாத்தான் உங்க உடம்பு குணமாகும். வாழணும்னு  நினைங்க. வாழ்வோம்னு  நம்புங்க. சத்தியமா உங்க  நிம்மதிக்கு  நா இடைஞ்சலா  இருக்க  மாட்டேன்."

அவள்  தன்  அம்மாவிடம்  பேசியதை  ஒரு  முறை  அவன் கேட்க  நேரிட்டது.  அதன்  பிறகுதான்  அந்த  எதிர்பாராத அதிர்ச்சி நிகழ்ந்தது.  வியாபார  எதிரி  ஒருவன் அப்பாவை  ஆள்  வைத்துக்  கொன்றான்.  ந்த அதிர்ச்சியில் அம்மா  பிரமை  பிடித்தாற்போல் உத்திரத்தை  வெறித்தபடி நாலு  நாள்  கிடந்தாள். பத்து  வயது  அஸ்வினை  சின்னம்மா  ராதிகாவிடம்  ஒப்படைத்து  விட்டு  ஐந்தாம்  நாள்  உயிரை  விட்டாள்.  அன்றிலிருந்து  அவனை  வளர்த்தது  ராதிகாதான்.  என்னதான்  அவள்  அன்பைப்  பொழிந்தாலும்  அவனால்  அவளுடன்  இயல்பாக  இருக்க  முடியவில்லை.  ஒதுங்கியே  இருந்தான்.  அவனது  வளர்ச்சியில்  அவளது  பங்கு  அதிகம்தான்  என்றாலும்  அவன்  அவளிடம் அதிகம்  பேசுவதில்லை. அவசியம்  என்றால்  மட்டுமே  பேசுவான்.  அவனது  அந்த  விட்டேற்றியான  போக்கு  அவளை  வருத்தப்  படுத்துமோ  என்று  கூட  அவன்  யோசித்ததில்லை.  

அம்மாவின் நிலையும் அப்பாவின்  மரணமும்  கண்டபின்  அவனுக்கு திருமணம்  என்ற  விஷயத்தில்  பெரிதாக  ஈடுபாடு  ஏற்படவில்லை.  அது தேவை  என்ற  எண்ணமும்  எண்ணமும்  ஏற்பட்டதில்லை.  திடீரென  ம்யா  காலையில்  அதுபற்றி  கேட்டதும்  ஒரு  வினாடி  அவன்  திகைத்துத்தான்   போனான்.   அம்மா  சொல்லும்  பெண்ணை  மணப்பேன்  என்று  சொன்னது  கூட  எவ்வித  திட்டமிடலும்  இல்லாது  அவன்  வாயிலிருந்து  வந்த  பதில்தான்.   ஆனால்  இன்று  இரவுக்குள்  உங்கள்  அம்மா  ஒரு  ெண்ணை  அடையாளம்  காட்டுவாள்  என்று ரம்யா  சொன்னதுதான்  மிகவும்  ஆச்சர்யமாக  இருந்தது.  அந்த  ஆச்சர்யம் மாறாமலே  அவன்  வீட்டுக்கு  வந்தான். 

களைப்பு  தீரக்  குளித்து  உடை  மாற்றி  வரும்  போது  டைனிங்  டேபிளில்  இரவு  உணவு  தயாராக  இருந்தது. 

"பேட்டி  ல்லார்ந்துது"  சப்பாத்தியை  வைத்தபடி  சொன்னாள்  சின்னம்மா. 

"தேங்க்ஸ்"  தலைகுனிந்தபடி  சாப்பிட்டான்.  

"தேங்க்ஸ் நான்தான்  சொல்லணும்"    அவள்  சொல்ல,  புரியவில்லையே  என்பது  போல்  நிமிர்ந்து  பார்த்தான்.  

"உன்  கல்யாணம்  பற்றி  நீ  சொன்ன  பதில்தான்.  நீ  என்னை  அம்மாவா  நினைக்கறயான்னு  தெரியாது. ஆனா  நா  உன்னை என்  பிள்ளையாத்தான் நினைக்கறேன்.  தப்போ  சரியோ உங்கப்பா  மேல எனக்கிருக்கும்  காதல்  நிஜம். அது  காமத்தை  உள்ளடக்கியதல்ல.  இந்த  அசம்பாவிதம்  எல்லாம்   நடக்காதிருந்தால நா  உங்க  குடும்பத்தை  விட்டு  விலகி  ஏதோ  ஒரு  மூலையில்  உங்க  எல்லாரோட நன்மைக்கும்  பிரார்த்தித்துக்  கொண்டு,  உங்கப்பாவை  காதலித்தபடி வாழ்ந்திருப்பேன். ஆனா  நாமே  நினைக்காத  சில திருப்பங்கள்  ஏற்பட்டு  விட்டது. உங்கப்பாகிட்ட நா கொண்ட காதல்  அணுவளவு  கூட  இன்னும்  மாறலை.  நீ அவரோட  பிள்ளை  மட்டுமல்ல.  என்  மனதார  நா  ஏற்றுக்  கொண்ட  என்  பிள்ளையும்  கூட.  உனக்கான  அன்பு  என்  மனசு  முழுக்க  நிறைஞ்சிருக்கு.    நீ  சரின்னு  சொன்னா  உனக்கான  பெண்ணை  நா  அடையாளம்  காட்டத்  தயாரா  இருக்கேன். 

அஸ்வின்  திகைப்போடு  அவளைப்  பார்த்தான்.  

"இது  எனக்கொரு  சந்தர்ப்பம்  அஸ்வின்.  நீ  என்னை  அம்மாவா  நினைக்கறயா  இல்லையான்னு  தெரிஞ்சுக்க  எனக்கும்  ஆசையா  இருக்கு.  உன்  முடிவு  எதுவா  இருந்தாலும்  ஏத்துக்கற  மனப்பக்குவமும்  எனக்கிருக்கு.  உன்னால  என்னை  அம்மாவா  ஏத்துக்க  முடியலைன்னா  இங்கேர்ந்து  போய்டவும்  நா  ரெடியார்க்கேன். ஏன்னா  இப்போ  நீ  குழந்தை  இல்ல.  என்  உதவியும்  துணையும்  உனக்கு இனி  தேவையும் படாது.  எதுவா இருந்தாலும்  உன்கிட்டேர்ந்து  ஒரு உண்மையான  பதிலைதான்  நா  எதிர்பார்க்கிறேன்."  

அவன்  தன்  அறைக்கு  வந்தான்.  தூக்கம்  வரவில்லை.  நள்ளிரவில் வெளியில்  வந்தான்.  சின்னம்மா  தூங்காமல்  புத்தகம்  படித்துக் கொண்டிருந்தது  ஆச்சர்யமாக  இருந்தது.  அவள்  எதிரில்  வந்து  அமர்ந்தான்.  

"யாரந்த  பொண்ணு?"

"ராதிகாவின்  முகம்  மலர்ச்சியில்  அவளது  மொத்த  தாயன்பும்  வெளிப்பட்டது.  அவளது  விழிகளில்  படர்ந்த  நீரில்  ஆயிரம்  உணர்ச்சிகள். 

"நாளைக்கு  சாயந்திரம்  காட்டறேன்"  சந்தோஷமாகச்  சொன்னாள்.

மறுநாள்  அவன்  அலுவலக  வேளையில்  மூழ்கியிருந்த  போது  கதவு தட்டி  அனுமதி  பெற்று  உள்ளே  வந்தாள்  ரம்யா.  

"என்ன  திடீர்னு  இங்க?"

உங்க  பேட்டியோட  டிவிடி  காப்பி  கொடுக்கலாம்னு  வந்தேன்.  அப்டியே  உங்ககிட்ட இன்னொரு  முக்கியமான  விஷயமும்  சொல்லிட்டுப்  போகலாம்னு....."

"என்ன  விஷயம்?"

கல்யாண  விஷயம்தான்.  என்  கல்யாண  விஷயமா  நா  யாரோட  அனுமதியையும்  கேட்க வேண்டிய  அவசியமில்லை.  நா  முடிவு  செய்தால்  போதும்.'

"சரி  இதை  எதுக்கு  என்கிட்டே  சொல்றீங்க?"

"எனக்கு  உங்களைப்  பிடிச்சிருக்கு.  கொஞ்ச  நாள்  காதலிச்சுட்டு  நாம  கல்யாணம்  செய்துப்போமா?"

அவன்  திகைத்தான்.  நான்தான்  சொன்னேனே.  என்னோட  அம்மா  காட்டற ..."  அவன் முடிப்பதற்குள்  தொலைபேசி  அடித்தது.  

அஸ்வின்  நான்தான்  அம்மா  பேசறேன்.  நா  சொல்லல  உனக்குப்  பொருத்தமான  ஒரு  பெண்ணைப  பார்த்திருக்கேன்னு?.  அவ  இப்போ  உன்  எதிரில்தான்  ட்கார்ந்திருக்கா.  அவ  காதலை  சந்தோஷமா  ஏத்துக்கோ.  நான்தான்  அவளை அங்கே  அனுப்பி  வெச்சேன்."

அஸ்வின்  போனை  வைத்து  விட்டு  அவளைப்  பார்த்தான்.  

"போலாமா?"

"எங்கே?"

காதலிக்கத்தான்.  

"ஆச்சர்யமா  இருக்கு  உங்க  அம்மாவா  போன்  பண்ணி   காதலிக்கச் சொன்னாங்க?"

"ஆமா"

"அவங்க  இறந்துட்டாங்கன்னு.....!"

"உயிரோடதான்  இருக்காங்க.  வேற  ரூபத்துல" 

"ம்ஹும்?"

"ஆமா ஒரே  நேரத்துல  தாயும்,   காதலியும்  கிடைக்கப் பெற்றவன்  நான்"


                                                 *********   End    ********

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதையின் ஒவ்வொரு வரியையும் மிகவும் ரஸித்துப்படித்து மகிழ்ந்தேன். எளிமையான நடையில் அருமையான தெளிவான வெளிப்படையான படைப்பு.

மனம் நிறைந்த பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை அம்மா...

RAMA RAMANAN said...

மன நிறைவைத்தந்த கதை.