Saturday, February 18, 2012

விருது வாங்கலையோ விருது.!


நேற்று இரவு ஒன்பதரை மணிக்கு கற்றலும் கேட்டாலும் ராஜி என் கைபேசிக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை இன்று காலை எட்டு மணிக்குதான் பார்த்தேன். ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி மேற்படி விருதுகளை எனக்கு அளித்திருப்பதாக ராஜி செல் போனிலும் அழைத்து சொல்ல ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவுப் பக்கம வந்திருக்கிறேன். இரண்டு மாதமாய் நான் பதிவு எழுதாத கரணம் குறித்து ஒரு பதிவே எழுதி விடுகிறேன். என் கால்கள் நன்கு குணமாகி விட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.


இனி எனக்குப் பிடித்த விஷயங்கள்.

இசை மழை எந்நேரமும் வேண்டும். (கர்நாடக இசை, மலையாள திரை இசை, பழைய தமிழ் திரைப் பாடல்கள்)

நிஜ மழையும் பிடிக்கும். கொட்டும் மழை, மெலிதாய் குழலிசை, கையில் தி.ஜா.வின் புத்தகம் வேறென்ன சுகம் வேண்டும்?

குழந்தைகள். இந்த விஷயத்தில் நான் நேருவுக்கு அக்கா. எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் எனக்குள் ரோஜாக்கள் மலரும். என் வீட்டின் இரட்டை ரோஜாக்கள்தான் இப்போது என் சொர்க்கம்.

நல்ல திரைப் படங்கள் - மொழி பேதமின்றி நல்ல படங்களை தேடித் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த படம் "Pursuit of Happiness"

நட்பு - நான் மிகவும் மதிப்பளிக்கும் விஷயம் நட்பு. நான் மிக உண்மையான நட்பை கொடுப்பவள். எதிர்பார்க்கிறவள். என் நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் நட்பாகவே இருக்கும். என்னுடைய ஒவ்வொரு நட்பும் நண்பர்களும் உயர்ந்தவை. என் குழந்தைப் பருவத்து தோழியோடு இன்றளவும் இறுக்கமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து உறவுகளுக்குள்ளும் உறவு மீறிய நட்பிருத்தல் அவசியம் என எண்ணுபவள்.


எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதன் படி இந்த விருதுத் திருவிழா பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இதுவும் ஒரு சந்தோஷம்தான். காக்கைக் கூட்டமாய் பகிர்ந்து கொள்வோமே.

நான் விருதளிக்கவிழைவது.


கோபி ராமமூர்த்தி. http://ramamoorthygopi.blogspot.in/2012/02/2.html





இவர்கள் எல்லோரும் ஏற்கனவே விருது வாங்கி விட்டார்களா எனத் தெரியாது.
இருந்தாலும் நானும் அளிக்கிறேன்.

இந்த விருதுத் திருவிழாவில் அதிகபட்ச விருதுகள் பெறுபவருக்கு இப்பவே எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

மீண்டும என்னை ஒரு அவசர பதிவெழுத வைத்த ஆரண்ய நிவாசிற்கு எனது நன்றி.

17 comments:

மகேந்திரன் said...

விருது பெற்ற தங்களுக்கும்
தங்கள் கையால் விருது பெற்ற
அனைவருக்கும் என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

R. Gopi said...

மிக்க நன்றி மேடம்

ஹுஸைனம்மா said...

ஆஹா, இந்த மாசம் எனக்கு விருது மாசம் போல!! மொத்தம் நாலு விருதுகள்!! மகிழ்ச்சியில் திக்குமுக்காடுகிறேன்னுதான் சொல்லணும். இந்த மகிழ்ச்சி, விருதினால் என்பதைவிட, எல்லார் நினைவுகளிலும் இந்தளவுக்கு நானும் பதிந்து இருக்கிறேன் என்கிற காரணத்தினால்தான். ரொம்ப ரொம்ப நன்றி மேடம்.

RAMA RAVI (RAMVI) said...

விருதுக்கு வாழ்த்துக்கள் மேடம். தாங்கள் நன்றாக குணமடைந்து பற்றி மிகவும் சந்தோஷம்,மேடம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கால்கள் குணமானதும் கைகளால் கைகள் அள்ளிய நீருக்கு விருது.

பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். த்குதியாக்கிக் கொள்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

என் கால்கள் நன்கு குணமாகி விட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.

நிறைவான மகிழ்ச்சிப் பகிர்வுக்கு வாழ்த்துகள்..

விருது பெற்றமைக்குப் பாராட்டுக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என் கால்கள் நன்கு குணமாகி விட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.//

இதைக்கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

விருது தாங்கள் பெற்றுள்ளதால் தனிச் சிறப்புப் பெற்றுவிட்டது.

தாங்கள் விருதினை வழங்கியுள்ள எழுத்துலக ஜாம்பவான்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...

விருது பெற்ற தங்களுக்கும்
தங்கள் கையால் விருது பெற்ற
அனைவருக்கும் என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி மேடம்

சாந்தி மாரியப்பன் said...

விருதுக்கு வாழ்த்துகள்.. பூரண நலத்துடன் விரைவில் பதிவுலகத்துல வலம் வாங்க :-)

ஜோதிஜி said...

மிக்க நன்றி.

விருதுடன் பணமுடிப்பு, பட்டயம், போன்றவைகளும் உண்டா?

ரிஷபன் said...

அன்பு நன்றி மேடம்.

சின்னக் குழந்தை போல் மனசு குதூகலிக்கிறது.

சந்தோஷம் தந்த உங்களுக்கு எந்நாளும் மலர்ச்சி பொங்கட்டும்.

raji said...

அடடா!நான் லேட் என்ட்ரியா? அதனால என்ன பரவாயில்லை.எப்பிடியோ வந்துட்டேன்ல? :-) (வேற எப்படி சமாளிக்கறது?)

வாழ்த்துக்கள் மேடம் :-)

//எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்//

மிகச் சரியான நல்ல மேற்கோள்.positive thinking :-))

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

கே. பி. ஜனா... said...

வாழ்த்துக்கள்!

என்னுடைய பதிவில் புதிதாக ஆரம்பித்திருக்கிற தொடர் இது.
'அன்புடன் ஒரு நிமிடம்'
முதல் பகுதி.
'எண்ணிச் சிந்திடுவோம்...'
அன்புடன் தாங்கள் சொல்லும் அபிப்பிராயம் அறிந்தால் மகிழ்வேன். அதற்கு என் நன்றி! .......

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

More Entertainment

For latest stills videos visit ..

.