Friday, December 24, 2010

என் பார்வையில் மன்மதன் அம்பு.

வெளியான முதல் நாளே மன்மதன் அம்பு பார்த்தது சந்தோஷமாக இருந்தது.
விமர்சனம் என்கிற பெயரில் ஒட்டு மொத்த கதையையும் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் கமலின் தீவீர ரசிகை. அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் எழும் சர்ச்சைகள் வருத்தப் பட வைக்கிறது. ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தை இது நிச்சயம் பாதிக்கும். நிற்க, மன்மதன் அம்புக்கு வருவோம்.

டிஷ்யூம் டிஷ்யூம் என்று காது கிழியும் சண்டைக் காட்சிகள் இல்லை. நகைச் சுவைக்கு என்று தனி டிராக் கிடையாது. குத்துப் பாடல்கள் இல்லை. கட்டிப்பிடி நடனங்கள் இல்லை. குறைந்த பட்சம் தொட்டுப் பேசும் காட்சிகள் கூட இல்லை. திரிஷாவின் அறிமுகப் பாடல் மட்டும், அது கூட கதைக்கு தேவையானதால். தமிழ் சினிமாவின் பார்முலாவை அனாயாசமாக மாற்றி இருக்கிறார் கமல். ஒரு சிம்பிளான கதையை மட்டுமே நம்பி களம் இறங்கி இருக்கிறார். படத்திற்கு பலம், அவரது திரைக்கதையும் வசனமும். நடிகர் கமலஹாசனுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டர் கமல்ஹாசன் சளைத்தவர் இல்லை. ஒரு படி மேலேயே இருக்கிறார்.

பிரான்ஸ், வெனிஸ் என்று கேமரா அசத்துகிறது. அதற்காகவே பலமுறை படத்தைப் பார்க்கலாம். நகைச்சுவை, கதையோடு கலந்து அழகாக வெளிப் பட்டிருக்கிறது. கடைசி அரைமணி நேரத்தில் எப்பேர்ப் பட்ட சிடு மூஞ்சியும் சிரிக்கும் என்பது உறுதி. மாதவன் சங்கீதா திடீர் காதல்தான் ஒப்புக் கொள்ள முடியவில்லை.

கமல் மட்டும் எப்படி வயது குறைந்து கொண்டு வருகிறார் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம். த்ரிஷா மிக கியூட்டாக இருக்கிறார். சொந்தக் குரலில் பேசி இருக்கிறார். தொடர்ந்து பேசலாம்.

சங்கீதாவுக்கு ஒரு ஓ போடலாம். சூப்பரா செய்திருக்கிறார். நகைச்சுவையில் நல்ல டைமிங் மிக முக்கியம். அத்தனை பெரும் அதை உணர்ந்து மிக இயல்பாக செய்து நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதுவும் அந்த குட்டி (சோடா புட்டி) பையன் வாவ்! எங்கேர்ந்து புடிச்சாங்கன்னு தெரியல. இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரலாம் போல இருக்கு. கமல் மாதவன் காம்பினேஷன் அன்பே சிவத்திற்குப் பிறகு மறுபடியும் நல்லதொரு படத்தை தந்திருக்கு.

மொத்தத்தில் மூன்று மணி நேரம் ரிலாக்ஸ்டாக எல்லா கவலையும் (வெங்காயம் உட்பட) மறந்து விட்டு குழந்தைகளோடு அமர்ந்து பார்க்கலாம்.
மிக டீசன்ட்டான படம்.

20 comments:

Anonymous said...

.....காபி வித் வடை ............

R. Gopi said...

பாத்துடுவோம்!

Vijay Vasu said...

என்னை பொருத்தவரை படம் படு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

மொத்ததில் மன்மதன் அம்பு... நொந்து போன சொம்பு... மொக்கை படம்.. கலைஞர் டீவீயில் பார்க்க வேண்டிய படம்.. தியேடர் சென்று காசை செலவு செய்வது முட்டாள் தனம்... மேலும்.. இந்த கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிக்க கூடாது...

கானகம் said...

கமல் என்றைக்கு தான் ஒரு அறிவுஜீவி என்ற மாயவலையில் இருந்து வெளிவந்து ஒரு படத்தில் வெறும் நடிகனான நடிக்கிறாரோ அன்றுதான் அவருக்கு கதிமோட்சம்..இல்லையெனில் தானே நடித்து சிலநூறுபேரின் புகழ்ச்சியை மட்டும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதுதான்..மன்மதன் அன்பு வெறும் காலி சொம்பு ஆகியிருக்கிறது.. கப்பல், வெளிநாடு இவைதவிர இந்தப் படத்தில் விறு விறுப்பாகச் செல்ல என்ன இருக்கிறது சொல்லுங்கள்? நல்லவேளை மாதவனும், சங்கீதாவும் காப்பாற்றினார்களோ.. இல்லையெனில் இன்னும் மகா மோசமான தோல்வியைத்தழுவியிருக்கும்

raji said...

ஏற்கனவே நான் கமல் பட ரசிகை.
இத படிச்சதும் கட்டாயம் படம் பாக்க கெளம்பிட மாட்டோமா?.
பத்தாங்கிளாஸ் டிசம்பர் பரிட்சை முடியட்டுமேனு பாத்தோம்.அதான் இன்னிக்கோட முடிஞ்சதே.
(என்ன செய்ய இப்பல்லாம் அம்மாக்களுக்கும் பரிட்சைதான்)

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறவகையில் உங்கள் விமரிசனம் அமைந்திருந்தது.

ஶ்ரீநி said...

//அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் எழும் சர்ச்சைகள் வருத்தப் பட வைக்கிறது//

நல்ல நக்கல் தான்...இந்த சர்ச்சைகளுக்கான காரணங்கள் விளம்பரத்துக்காக வேண்டுமென்றே திணிக்கப்படுபவை என்றே எனது எண்ணம். உண்மையாக காமாந்தஹாசனுக்குத் துணிவிருந்தால் ஒருவன் நான்கு பெண்களை மணப்பதையோ பாதிரியார்கள் செய்யும் அட்டூழியங்களையோ இடித்துரைத்து தன் பகுத்தறிவை நிலை நிறுத்த வேண்டியது தானே.. அங்கெல்லாம் முதுகெலும்பு காணாமல் போய் விடும்.இந்த மலப்புழுவுக்கு நானும் ஒரு ரசிகனாக ஒரு காலத்தில் இருந்தேன் என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்த்துக் கொள்கிறேன்..

//கட்டிப்பிடி நடனங்கள் இல்லை. குறைந்த பட்சம் தொட்டுப் பேசும் காட்சிகள் கூட இல்லை. // Are you Serious? அதுக்கெல்லாம் சேத்துத்தானே சரோஜாதேவி புஸ்தக லெவல்ல ஒரு கவிஜ வைக்கப்பட்டு இருந்தது.. ஏதோ அதைக் கட் பண்ணாங்களோ நீங்க இப்டி ஒரு விமர்சனம் போடறீங்களோ..இதன் பெருமை உதயநிதியையே சேருமென்று தோன்றுகிறது.,..

மாணவன் said...

விமர்சன பகிர்வுக்கு நன்றிங்க

படம் இந்த வாரம் பார்த்துட வேண்டியதுதான்

மனோ சாமிநாதன் said...

விமர்சனத்தைப்படித்ததும் படத்தைப் பார்க்கலாம் என்று தோன்றி விட்டது!

கலையன்பன் said...

நகைச்சுவையுடன் உள்ள கமல் படங்கள் எனக்குப் பிடிக்கும்.
உங்கள் விமரிசனம் படித்தபின் இது நகைச்சுவையான
படமாயிருக்கும் என்று தோன்றுகின்றது. படம் பார்க்க
ஆவல் கூடிவிட்டது.
இது கமல் பாடிய பாடல்:
ராசாத்தி உன்னப் பார்க்க ஆச வச்சேன்டி. 

ரிஷபன் said...

திட்டிகிட்டாவது படம் பார்க்கிற குரூப்தான் நாமல்லாம்.. பார்த்திருவோம்..

Philosophy Prabhakaran said...

சுருக்கென்று ஆனால் நறுக்கென்று எழுதியிருக்கிறீர்கள்...

NADESAN said...

நல்லது படம் பார்த்துவிடவேண்டியதுதான்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

Unknown said...

கமல் மட்டும் எப்படி வயது குறைந்து கொண்டு வருகிறார் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்//

இது தான் எனக்கும் புரியவில்லை.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

முதல் முறை ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுதினேன். அது இரண்டே நாளில் இன்ட்லியில் பிரபலமாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி. ஓட்டுப் போட்டவர்களுக்கும் நன்றி

Matangi Mawley said...

Nice vimarsanam mam!! paakkalaamnu iruntha enna- inga sila per paakka vendaam-nu sonnaanga... unga review padiththa piragu- paarkalaam ngara mudivuku vanthutten!

Anonymous said...

படத்தில் வரும் சங்கீதவின் குட்டி பயன், உதயநிதி ஸ்டாலினின் மகன் தான்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Oh! very sweet

Anonymous said...

very nice review. i like it. keep it.
balu.

Cable சங்கர் said...

அந்த சிறுவன் உதயநிதி ஸ்டாலினின் மகனில்லை தவறான தகவல்