Saturday, June 12, 2010

மனித நேயம் குறைகிறதா?

சென்ற வாரம் கடற்கரை சாலையில் கண்ட ஒரு காட்சி. விவேகானந்தர் இல்லம் அருகே நான் சென்ற பஸ் திடீரென   நின்றது.  முன்னால் ஒரு பஸ் நின்றிருக்க அந்த பஸ்ஸில் பயணித்தவர்கள் திமு திமுவென எங்கள் பஸ்ஸில் ஏறினார்கள். ஜன்னலுக்கு வெளியே நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. சுமார் முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் வலது கரத்திலிருந்து ரத்தம் ஆறாகப் பெருக நின்றிருந்தார். அவரது பைக் கீழே விழுந்து கிடந்தது. முன்னால் சென்ற
 பஸ் மோதி விபத்து நிகழ்ந்திருந்தது.  

அடிபட்ட மனிதர் இடது கையால் வலது கையை பிடித்தபடி  பரிதாபமாக நின்றிருக்க அவருக்கு முதலுதவி அளிக்க எந்த நடவடிக்கையும் எடுத்தாற்போல் தெரியவில்லை. இதில் என்ன கொடுமை என்றால் அவர் கீழே விழுந்த சமயத்தில் அவரது மொபைல் போன் சாலையில் விழுந்திருக்கிறது. வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில் ஒருவன் அதை எடுத்துக்கொண்டு நழுவியிருக்கிறான். யாருக்கும் தகவல்  கூட சொல்ல முடியாத நிலையில் அடிபட்டவர் நின்றிருந்த காட்சி இன்னமும் என் மனதை விட்டு அகலவில்லை. 

அதற்குள் எங்கள் பஸ் நகர்ந்து விட்டது.  போலீஸ் வந்து அவருக்கு உதவியதா என்று தெரியவில்லை. அந்த மனிதர் என்ன வேலையாகப் போய்க்கொண்டிருந்தார்,  அந்த மனிதர் இப்போது எப்படி இருக்கிறார்? ஒன்றும் தெரியவில்லை.  மனித நேயம் குறைந்து கொண்டு வருகிறது என்பது வருத்தமான உண்மை. இல்லாவிட்டால் அந்த மனிதன் அவரது செல் போனைத் தூக்கிக் கொண்டு போவானா?   அன்று முழுக்க அடிபட்டவரையும் அவரது குடும்பத்தையும் பற்றிய நினைப்பு நீங்கவில்லை. யார் மீது தவறு? சாலை விபத்துகள் என்று குறையும்?

10 comments:

ராம்ஜி_யாஹூ said...

வண்ண நிலவனின் கவிதை தெர்யுமா:(1980's)

சைக்கிள் விழுந்ததில் சிதைந்தது தக்காளி பழங்கள் மட்டும் அல்ல

மனித நேயங்களும் தான்.

Unknown said...

மனிதநேயம் மறைகிறதோ ???

நியாயமான கேள்விகள் அடங்கிய நல்பதிவு

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

மதிப்பிற்குரிய ராம்ஜி, கலாநேசன், உடனடியாய் எனது வலைத்தளத்திற்கு வந்து மறுமொழி கொடுத்ததற்கு நன்றி. மனிதநேயம் பேணப்பட வேண்டியது அவசியம்.

Ramachandranwrites said...

"வண்ண நிலவனின் கவிதை தெர்யுமா:(1980's)

சைக்கிள் விழுந்ததில் சிதைந்தது தக்காளி பழங்கள் மட்டும் அல்ல
மனித நேயங்களும் தான்."

இது வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி கவிதை - சரி பார்க்கவும்

Gowri said...

Hi Atleast you could ahve got down and helped him. :-(

Anyway, i hope he got some help some way.

-Gowri

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

விபத்து நடந்த பேருந்திலிருந்து அத்தனைப் பெரும் எங்கள் பேருந்தில் ஏறிவிட்டதால் கூட்ட நெரிசலில் சட்டென ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்த இடத்தில் எங்கள் பஸ் நின்றது மிஞ்சிப்போனால் இரண்டு நிமிடம்தான். வோட்டுனர் கூட்டத்திற்கு பயந்து அங்கிருந்து நகர்ந்து விடுவதிலேயே இருந்தார். இருந்தாலும் என்னால் எந்த உதவியும் செய்ய முடியாமல் போனது வருத்தமாகவே உள்ளது

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சோலார் விளக்குப் போல் இருந்த மனித நேயம், 100 வாட்ஸ்..60 வாட்ஸ்..40 வாட்ஸ்..ஆகத் தேய்ந்து, இப்போது 0 வாட்ஸாக ஆகி விட்டது. என்றைக்கு FUSE போகுமோ தெரியவில்லை!!

"தாரிஸன் " said...

//அந்த மனிதர் என்ன வேலையாகப் போய்க்கொண்டிருந்தார், அந்த மனிதர் இப்போது எப்படி இருக்கிறார்? //
இந்த கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்...??

dheva said...

மனித நேயம் குறைந்து கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன.....!!!!!

நீர்த்துப் போகாத ஒரு ஸ்திரமான மனோதத்துவ ரீதியான மாற்றம் கூடிய கட்டமைப்பு தேவை.

பகிர்வுக்கு நன்றிகள்!!!!!!

மோனிஷா said...

மேடம் நீஙககூட ஏதாவது செய்திருக்கலாமே.அடுத்தவர்களுக்கு ஒரு “மாதிரி” யாக இருந்திருக்குமே.